புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியியல் ஓர் அறிமுகம்

நூலாசிரியரான பேராசிரியர் சதாசிவம் முத்துலிங்கம் ஒரு மூத்த தலைமுறைக் கல்வியாளர். முதலில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் கல்வியியல் துறையிலும் பணியாற்றியவர். குறிப்பாகப் பல்கலைக்கழக மட்டத்தில் ஆசிரியர் கல்வியாளராகத் திகழ்ந்த பேராசிரியர் அவர்கள் பிரதானமாகக் கல்வி உளவியல், கல்விப் புள்ளியியலும் மதிப்பீடும், விஞ்ஞானக் கல்வி கற்பிக்கும் முறைகள் ஆகிய பாடங்களைத் துறைப்போகக் கற்பித்தார்கள். நான் உட்பட இன்றைய தலைமுறையினரான பல கல்வியியல் பேராசிரியர்களும் மூத்த கல்வியாளர்களும் அன்னாரிடம் உயர்கல்வி பயின்றவர்கள். இறுதிக் காலத்தில் கனடா சென்று வாழ்ந்து அங்கு காலமானவர். 
 
இன்று கல்வியியல் நூல்கள் ஏராளம் வெளிவந்துவிட்டன. எமது மதிப்பீட்டில் இருநூறு நூல்களாவது வெளியிடப்பட்டிருக்கலாம். இலங்கையில் வெளிவந்துள்ள கல்வியியல் நூல்கள் பற்றிய ஒரு நூற்பட்டியல் ஒன்று இன்றைய ஒரு முக்கிய தேவை என்பது வேறொரு விடயம். அதில் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய விடயம் 1970களில் தமிழ்மொழியில் கல்வியியல் நூல்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, இந்நூலை எழுதி வெளியிட்டவர் பேராசிரியர் அவர்கள். இன்று கல்வியியல் எழுத்துப்பணி விரிவான முறையில் நடைபெறுகின்றதென்றால் அப்பணிக்கு ஒரு முன்னோடியாக அமைந்தவர் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். 
 

விமலா கிருஷ்ணபிள்ளை
Vimala, Krishnapillai Dr

பாடசாலைகள் கல்வி அறிவையும், சிறந்த உளப்பாங்குகளையும், பயனுள்ள திறன்களையும் வழங்கும் இலக்குகளுடன் இயங்கி வருகின்ற போதிலும் இன்றைய சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்கள் காரணமாக, மாணவர்களுக்கு இன்று பல்வேறு துறைகளில் வழிகாட்டலும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன. தொழில், கல்வி, பாடப்பிரிவுகளைத் தெரிதல் போன்றவற்றில் மட்டுமன்றி மாணவர் அடைகின்ற விரக்திகள், பதட்டங்கள், அவர்களிடம் எழுகின்ற அந்தரங்கமான பிரச்சினைகள் பற்றி அவர்களுக்கு நல்வழி காட்ட, இப்பணியில் கோட்பாட்டு அறிவும் செயற்பாட்டு அனுபவமும் மிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இத்துறை சார்ந்த தமிழ் நூல்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கலாநிதி விமலா கிருஷ்ணபிள்ளை அவர்கள் இந்நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மட்டுமன்றி பெற்றோரும் பயனடையக் கூடிய இந்நூல் தமிழ்கூறும் நல்லுலக