புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமய உளவியல்

இது சமய உளவியல் தொடர்பாக தமிழில் முதலில் வெளிவரும் நூல். ஆங்கிலமொழியில் இத்துறையில் பெருந்தொகையான நூல்கள் வெளிவந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் இது ஒரு பாடத் துறையாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
நவீன உளவியல் சமயத்தைப் பல பரிமாணங்களிலே ஆராய்கின்றது. அகவய நிலையில் மட்டுமன்றி புறவய நிலையிலும் சமயத்தை நோக்குதல் அறிவு நோக்கில் முக்கியமானது.
'ஒப்பியல் சமயம்' என்ற அறிவுத்துறையும் அண்மைக்காலமாகப் பெருவளர்ச்சியடைந்து வருகின்றது. சமய உளவியல் ஒப்பியல் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சமயங்களுக்கிடையே காணப்படும் பொதுத்தன்மைகள் அடிப்படையான மானிட இயல்புகளைப் புலப்படுத்துகின்றன. உளவியல் அதனை மேலும் ஆழ்ந்து நோக்குகின்றது.
இலங்கைப் பள்ளிக்கூடங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் சமயம் ஒரு பாடமாக இடம்பெற்றுள்ள நிலையில் சமய உளவியல் பற்றிய அறிவு மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
சிறப்பு வாசிப்பை மட்டுமன்றி, பொது வாசிப்பையும் கருத்திற் கொண்டு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.

சபா.ஜெயராசா

 


தி.கமலநாதன்
Kamalanathan, T

திருநாவுக்கரசு கமலநாதன் ஆசிரியர் சேவையில் இணைந்து ஆசிரிய கல்வியாளர் சேவையில் முகிழ்த்தவர். விரிவுரையாளர், உபபீடாதிபதி,  பீடாதிபதி எனப் பன்முக ஆளுமைகளை வெளிப்படுத்தி உயர்ந்தவர். கல்வியியல் கற்கையில் 'முனைவர்' பட்டம்  பெற்றவர். தனது சொல் செயலால் தன்னைத் தனியாக அடையாளம் காட்டியவர்.         கல்விச் சூழலில் காலத்தை வென்ற கமலமாகப் பூத்தவர். 

இவர் பெற்ற அனுபவமும் அறிவும் வளமானது.  இதுவே இவரை கல்வி அமைச்சில்  கல்விசார் தரவிருத்திக்கு மதியுரைஞராகவும் இருத்தியுள்ளது. தொடர்ந்து கல்வியியல்சார் சிந்தனைகளை ஆக்கமாகவும் வெளிப்படுத்திக்         கொண்டிருப்பவர். சமூக சமயப் பணிகளிலும் தமிழ்ப்பணிகளிலும் ஈடுபாடு கொண்டு 'வாழ்வின் அர்த்தம்' முழுமையடைய       இயங்கிக் கொண்டிருப்பவர்.