புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

குழந்தை உளவியலும் கல்வியும்

பேராசிரியர் சபா.ஜெயராசாவின் ஆக்கங்களுள் தனிச்சிறப்பு மிக்க நூலாக 'குழந்தை உளவியலும் கல்வியும்' அமைகின்றது. 
குழந்தை உளவியல், குழந்தைக் கல்வி, குழந்தை வளர்ப்பு முறை முதலாம் துறைகளிலே பரவலான ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. வளர்ந்த நிலையில் ஏற்படும் விலகல் நடத்தைகளுக்கும் இடர்களுக்கும் குழந்தை நிலை வளர்ப்பில் நிகழ்ந்த தவறான அணுகுமுறைகளும் ஆதரவு இன்மையுமே முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. 
இன்று சிறுவர்க்குரிய கல்வியில் அழுத்தங்களும் திணிப்புக் களும் மேற்கொள்ளப்படுவதால் எதிர்ப்பாராத பின்னடைவுகள் வளர்ச்சிப் பருவத்தில் நிகழ்ந்த வண்ணமுள்ளன. 
அதேவேளை முன்பள்ளிகளும் பெருமளவிலே கவனிப்பாரற்ற நிலையிலே இயங்கிய வண்ணமுள்ளன. அரசாங்கம் ஆரம்பக் கல்வியில் செலுத்தும் ஊன்றிய கவனம் போன்று முன்பள்ளிகளிலே செலுத்துதல் இல்லை. நாட்டம் கொள்வதுமில்லை. 
மேற்கூறிய எதிர்மறையான சூழலிலே சிறார் பற்றிய தெளிந்த புலக்காட்சியை ஏற்படுத்துவதற்கும் முன்னேற்றகரமான அணுகு முறைகளை முன்னெடுப்பதற்கும் பயனுள்ள ஆக்கமாக இந்நூல் அமைகின்றது. தமிழ் மரபுகளையும் உள்வாங்கிய அனைத்து விடயப் பரப்புக்களையும் உள்ளடக்கிய நூலாக இது கட்டமைப்புச் செய்யப் பட்டிருத்தலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 
முன்பள்ளி ஆசிரியர்கள் தாமாகக் கற்று தமது வாண்மையை மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் பெற்றோர் உளவியல் நிலையிலே தமது பிள்ளைகளை அணுகி முழுநிறைவான வளர்ச்சியை அறிகை ஆட்சி, எழுச்சி ஆட்சி, உடலியக்க ஆட்சி ஆகிய துறைகளிலே ஈட்டிக்கொள்வதற்கும் இந்நூல் பயன்மிக்க ஆக்கமாகி


எஸ்.அன்ரனி நோர்பேட்
Antony Norbert, S

சூசைப்பிள்ளை அன்ரனி நோர்பேட் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் புவியியல் கற்கையின் சமகாலச் செல்நெறிகளையும் மாற்றங்களையும் உடனுக்குடன் உள்வாங்கி கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் புதிய நுட்பங்களை விருத்தி செய்து வருபவர். 

சமூக அறிவியல் துறைகளின் வளர்ச்சிகளை இற்றைப்படுத்திக் கொண்டு புதிய ஆய்வுக் கலாச்சார விருத்தியிலும் முனைப்புடன் இயங்குபவர். சர்வதேச ஆய்வுக் கருத்தரங்குகளிலும் ஆய்விதழ்களிலும் கட்டுரைகள் வழங்கி வருபவர். 

தமிழ்மொழி மூலமான புவியியல் கற்றைசார் புலமையின் விரிவாக்கத்திற்கு வளம் சேர்த்து வருபவர். இத்துறைப் பேராசிரியர்களின் வழித்தடங்களிலிருந்து மாறுபட்டு இயங்குபவர்.