சமகால அரசியல் கலாசார செல்நெறிகள் |
‘சமகால அரசியல் கலாசார செல்நெறிகள்” என்ற இந்நூல் 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்த ஆய்வரங்குகளில் நூலாசிரியரால் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் விரிவாக்கம் செய்யப்பட்ட விடயங்களும் ஏனைய சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு வெளிவருகின்றது. இதன் தனித்துவம் கடந்த காலத்தில் உலகில் நிகழ்ந்த அரசியல் சம்பவங்களின் பதிவுகள் ஆய்வுகளாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், சரியான அரசியல் பாரிவையை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் இலங்கையில் வாழும் சிறுபான்மையினரின் அரசியல் இருப்பை வரலாற்று ரீதியில் நிறுவவேண்டிய கடமைப்பாடும் முக்கியமானதாகும். பயங்கரவாதம் என்ற ஓரம்சம் இஸ்லாமியர்களையும் தமிழர்களையும் எப்படி உலக அரசியல் வரைபுக்குள் பாதிக்க வைத்தது என்பது இத்தொகுப்பில் காட்டப்பட்ட பிரதான அம்சமாகும். சாமுவெல் ஹன்ரிங்டன் குறிப்பிடுவது போல் உலகளாவிய நாகரீகளுக்கிடையே நிகழும் போரில் மேலாதிக்க நாகரிகங்களால் கீழைத்தேச நாகரிகங்கள் (இஸ்லாமியர்களினதும் தமிழர்களதும்) சிதைபட்டு வழக்கிழந்து போகும் துயரத்திலுள்ளன எனக் குறிப்பிட்டார். பின்நவீனத்திற்கு பின்பான உலகம் அவ்வகை சிதைப்பின் வேகத்தை அதிகரித்துள்ளது. அறிஞர்களும் சிந்தனையாளர் களும் முற்போக்கு வாதமென கருதும் அம்சங்கள் சமூக இருப்பின் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கி வருகிறது. இதிலிருந்து சமூகங்களோ இனங்களோ அ
|