தமிழரின் தோற்றமும் பரம்பலும்
|
'உலக முதற்றாய் மொழி தமிழே' என்று வலுவாக நிறுவியவர் மொழிநூல் மூதறிஞர் பாவாணர் அவர்கள் மாந்த நாகரிக வரலாறு தெற்கிலிருந்து தொடங்கியிருக்கின்றது. என்று அவர் கூறுவார். அவர் போற்றிய வரலாற்று அறிஞர்களுள் ஒருவர் வீ. ஆர்.இராமசந்திர தீட்சிதர். தமிழரின் தோற்றம் பரவல், நாகரிகம் பற்றி போலியான ஆதாரங்களைக் காட்டியோ காழ்ப்புணர்வுடனனோ சில வரலாற்றிஞர்கள் வம்படி வழக்காடல்கள் செய்தனா, செய்து வருகின்றனர்.
ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் இத்தகைய பொய்யுரைகளைத் தோலுரித்துக் காட்டும் மெய்யான முயற்சிகளும் நடந்துவருகின்றன. அவ்வகையில் அறிஞர் வி. ஆர் இராமச்சந்திரனார் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றி அது ஆங்கிலத்திலேயே The Origin and Spread of the Tamils என்று நூலாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. அதை நம் காலத்தில் வாழும் வரலாற்று ஆய்வாளர பாவாணர் வழியிலே ஆய்வு நடைப்போடும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் அருமையாக தமிழாக்கம் செய்துள்ளார் அதுவே உங்கள் கையில் தவழ்ந்துக் கொண்டிருக்கும் இச்சிறு நூல்.
அறிஞர் வி.ஆர் இராமசந்திரனார் 'தமிழர் தென்னிந்தியாவின் தொல்குடிகளே அவர்கள் மெசபத்தோமியாப் பகுதியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்று சில அறிஞர்கள் கூறுவது தவறு தொல்தமிழரே தென்னிந்தியாவிலிருந்து உலகெங்கும் பரவினர் சிந்துவெளி , எலாம், சுமேரியா, எகிப்து போன்ற பண்டை நாகரிகங்களை எல்லாம் உருவாக்கியவர்கள் இங்கிருந்து அங்கு பரவிய தமிழர்களே!' என்ற உண்மைகளை ஆணித்தரமான சான்றுகளுடன் இச்சிறு நூலில் நிறுவுகிறார். சொற்பொழிவு என்பதால் நூல் நாற்பது பக்கங்களில் சுருக்கியுள்ளார். ஆனாலும்சுற
|