பொ.கனகசபாபதி Kanakasababathy, P
|
திரு.பொ.கனகசபாபதி அவர்கள் கடந்த இருபது வருடங்களாக இலங்கை, இந்திய, கனடியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகிறார். அவரது படைப்புக்களிற் சில, அதிபர் ஒருவரின் கூரிய பார்வையில், பெற்றோர்ஃ பிள்ளை உளவியல், மாறன் மணிக்கதைகள் (இருபகுதிகள்), திறவுகோல், மனம் எங்;கே போகிறது என்ற தலைப்புகளில் நூலுருப் பெற்றுள்ளன.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் விலங்கியலில் சிறப்புப் பட்டம் பெற்று மகாஜனக் கல்லூரியில் அவர் ஏற்றுக் கொண்ட ஆசிரியப் பணி, சக மனிதர்களை மேம்படுத்தும் அவரது நோக்கத்திற்கு உவப்பாய் அமைந்தது. அதிபராய் அவர் பணிபுரிந்த காலங்களிற் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் பெருவளர்ச்சியுற்றன. புலம் பெயர்ந்து நைஜீரியாவில் ஆசிரியராகவும், கல்வி அதிகாரியாகவும், கனடாவில் ரொறன்ரோ பாடசாலைச் சபையின் கல்விசா
|