அடிப்படை உளவியல் |
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்று பாரதி பாடினான். தமிழில் புதிய அறிவியல் நூல்களுக்கு பாரதி காலத்தில் இருந்த தேவையை மனங்கொண்டே அவன் அவ்வாறு கூறினான். பாரதி மறைந்து எண்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. பாரதி காலத்தில் கற்பனை பண்ணியிருக்க முடியாத அளவுக்கு புதிய புதிய அறிவுத் துறைகளும் அறிவும் நமது காலத்தில் பன்மடங்காகப் பல்கிப் பெருகியுள்ளன. சமூக வளர்ச்சியும் தனிமனித முன்னேற்றமும் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பெரிதும் தங்கியுள்ள இன்றைய காலத்தில் இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவருவது முன் எப்போதையும் விட இன்று அவசியமாகியுள்ளது. |