புவியியல் : சூழலியல் முகாமைத்துவம் |
இலங்கையின் பாடசாலை முறைமையில் வகுப்பறைப் பாடம் மற்றும் தனியார் போதனை நிலையங்களில் வழங்கப்படும் போதனை தவிர்ந்த ஏனைய சுயகற்றல் முறைகளினூடாகக் கற்பதற்கான தகுதி வாய்ந்த நூல்களின் பற்றாக்குறை க.பொ.த. உயர்தர மாணவர்களைப் பொறுத்த வரையில் ஒரு குறைபாடாகக் கூறப்பட்டு வந்துள்ளது. அரசாங்கத்தின் இலவச பாடநூல் விநியோகமானது உயர்தர வகுப்புக்களைச் சென்றடைவ-தில்லை. இன்றைய கல்வி முறைமையின் புதிய நோக்கங்களுக்கமைய மாணவர்கள் சுயகற்போராக விருத்திபெறல் வேண்டும் என்னும் குறிக்கோள் ஓர் உயர்தரமான கல்வியின் நோக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. |