ஆளுமை உளவியல்
|
மனித ஆளுமை சமூக வரலாற்றின் தொடர்ச்சியான பதிவுக ளால் உருவாக்கப்படுகின்றது. சமூக இருப்பு (ளுழஉயைட நுஒளைவநnஉந) ஆளுமை யின் இருப்பாகின்றது. சமூக நிர்ணயிப்பின் பொருண்மியக் காரணி களின் வளர்ச்சியும் அவற்றினூடே தோற்றம் பெறும் பன்முகப் பாங்கு களும் ஆளுமையிலே பன்முகத் தோற்றப்பாடுகளையும் பன்முக உறு பண்புகளையும் (வுசயவைள) உருவாக்கிய வண்ணமுள்ளன. தனிச் சொத் துரிமையின் வளர்ச்சியோடு மனிதரின் தனித்துவங்களைக் கண்டறி யும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படலாயின. மனிதர் பிரபஞ்சத்தின் நடுவன் பொருளாக்கப்பட்டனர். அந்நிலையில் ஆளுமை, தலைமைத்துவம் போன்ற எண்ணக்கருக்கள் உளவியலின் ஆய்வுப் பொருட்களாயின.
மேலைப்புலத்தில் வளர்ச்சி பெற்ற உளவியற் சிந்தனா கூடங்க ளாகிய உளப்பகுப்புவாதம், நடத்தைவாதம், அறிகைவாதம், மானிட வாதம் முதலியவற்றை அடியொற்றி ஆளுமை உளவியலை நண்பர் மணியம் சிவகுமார் இந்நூலில் அனைத்தடக்க (ஊழஅpசநாநளெiஎந) முறை யில் விளக்கியுள்ளார்.
சமூகத்திலே காணப்படும் சுரண்டலும், பறிப்பும், முறியடிப்புப் போட்டிகளும், மேலெழ முடியா அவலங்களும் மனித ஆளுமையில் உதிர்வுகளையும் சிதறல்களையும், உடைதல்களையும் ஏற்படுத்திய வண்ணமுள்ளன. அந்நிலையிலே தோற்றம்பெறும் ஆளுமை வகைப் பாடுகளும் இயல்புகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. உளமுறிவினதும் உளச்சிதறல்களினதும் வெளிப்பாடுகளாக அமை யும், பதிவுகளும் தெறிப்புகளும், பரவற் கோலங்களும் சித்திரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
ஆளுமை உளவியலுக்குப் 'பெருந்தளமிட்டோர்' வரிசையில் உளப்பகுப்புச் சிந்தனையாளர் சிறப்பிடம் பெறுகின்றனர். பின்னைய உளப் பகுப
|