நோபல் பரிசு பெற்ற பொருளியலறிஞர்கள் - 2 |
மனித குலத்தின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொருஅசைவுக்கும் அடிப்படையாக விளங்குவது அறிவியல்.அறிவியல் என்பது அறிவைத் தேடுவது. அவ்வாறு தேடியதைமேம்படுத்துவது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில்முன்னேறிய நாடுகள்தான் இன்று பலதுறைகளிலும்வளர்ச்சியடைந்த நாடுகளாக விளங்குகின்றன.அறிவியல் மனப்பாங்குள்ள சமூகம் பல்துறையில்முன்னேற்றங்கண்டு வருகிறது. தொடர்ந்து அறிவியல்வளர்வதற்கும் புதிய துறைகள் புதிய கண்டுபிடிப்புகள்தோன்றுவதற்கும் அறிவியல் புதுவிசையாக அமைகிறது.இந்த விசைப்படுத்தலில் பல்வேறு அறிவியல் அறிஞர்கள்தொழிற்பட்டு வருகிறார்கள். இந்த ஆளுமைகள் தமதுசிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளால் புத்தாக்கமானபுரட்சிகரமான மாற்றங்களை உருவாக்குகின்றார்கள்.உலகளவு அறிவியல் அறிஞர்கள் பாராட்டப்படவேண்டும். கௌரவிக்கப்பட வேண்டும். அதுவும் அவர்கள்வாழும் காலத்தில் இது சாத்தியப்பட வேண்டும். இந்த உயரியநோக்கத்தில் 'நோபல் பரிசு' வழங்கப்படுகின்றது. இந்தப்பரிசுக்கு உரித்தானவர்களை இளந்தலைமுறையினர்அடையாளம் காண வேண்டும். அவர்களது சிறப்புகள்ஆய்வுகள் யாவும் கல்வியாக வாசிக்கப்பட வேண்டும். இந்தப்பண்பு மாற்றத்துக்கான ஆற்றுப்படையாக இந்நூல்அமைகின்றது. |