சமகாலக் கல்வி முறைகள் ஒரு விரிநிலை நோக்கு
|
ஆசிரியர் பணியில் ஈடுபட்டவர்கள் மட்டுமன்றிக் கல்வித்துறை யில் பணியாற்றும் சகலரும் - உதவிப் பணிப்பாளர்கள், பணிப்பாளர் கள் உலகளாவிய ரீதியில் கல்விமுறையின் செல்நெறிகள், புத்தாக்கச் செயற்பாடுகள் என்பவற்றை அறிந்துகொள்வதால், உலகளாவிய கல்விமுறைகள் பற்றிய அவர்தம் அறிவும் புரிந்துணர்வும் பெரிதும் விரிவடைய வாய்ப்புண்டு. கற்கைநெறி என்ற முறையில், இத்துறை யானது ஒப்பியல் கல்வி, சர்வதேசக் கல்வி என அழைக்கப்படு கின்றது. ஆங்கிலத்தில் இத்துறை சார்ந்த சஞ்சிகைகளும் நூல்களும் ஆய்வுகளும் ஏராளமுண்டு. அவற்றால் தமிழ்மட்டும் தெரிந்தவர்க ளுக்கு எதுவித பயனுமில்லை.
உலகளாவிய ரீதியில் கல்வித்துறையில் ஏற்பட்டுவரும் முன் னேற்றங்கள், புத்தாக்கங்கள், புதுமைகள் என்பவற்றைக் கற்பதனால் கல்வியியல் துறைசார்ந்த எமது அறிவு வளர்ச்சியடைவதோடு, கல்வித்துறையின் உலகளாவிய செல்நெறிகளைப் புரிந்துகொள்ள முடியும். இச்செல்நெறிகள் என்னும் பின்புலத்தில் எமது நாட்டின் கல்விமுறை பற்றியும் ஒப்பியல் ரீதியாக நுணுகி நோக்க முடியும். உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்காவும் ஜப்பானுங் கூட வெளிநாடுகளின் கல்விமுறைகளின் சிறப்பு அம்சங்கள் பற்றிய கற்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகின்றன.
19ஆம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டுக்கல்வி முறை பல நாடு களாலும் விரிவாக ஆராயப்பட்டது. ஏனைய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஜப்பானும் ஜெர்மனியின் (அப்போதைய பிரஷ்யா) பாடசாலைக் கல்விமுறை, பல்கலைக்கழகக் கல்வி முறையின் சிறந்த அம்சங்களை ஆராய்ந்து, பொருத்தமான அம்சங்களைத் தமது நாட்டின் கல்விமுறையில் இ
|