தலைமைத்துவக் கோட்பாடுகள் |
'தலைமைத்துவக் கோட்பாடுகள்' என்னும் தலைப்புடன் வெளிவரும் இந்நூல் எனது மூன்றாவது நூலாகும். இதனை எழுதி தமிழ் வாசகர்களுக்கு விசேடமாக தமிழ்மூலம் முகாமைத்துவம் பயிலும் மாணவர்களுக்கு சமர்ப்பிக்க முடிந்தமையை எண்ணி நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது முகாமைத்துவ கற்கைநெறியில் தலைமைத்துவம் என்னும் தொனிப்பொருள் தொடர்பாக இருக்கக்கூடிய வெற்றிடத்தை இந்நூல் ஓரளவேனும் நிரப்பக்கூடும் என்னும் எனது பணிவான நம்பிக்கையாகும். |