புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கற்றல் கற்பித்தல் : மேம்பாட்டுக்கான வழிமுறைகள்

வகுப்பறைக் கற்பித்தல் சிறப்புற அமைவதற்குப் பல்வேறு காரணிகள் துணைபுரிகின்றன. ஆசிரியர் கல்வியும் தொழில்சார் கல்வியில் வழங்கப்படும் அணுகுமுறைகளும், நுட்பங்களும் மட்டும் கற்றல் - கற்பித்தலின் மேம்பாட்டுக்கு உதவுவதில்லை. இவற்றோடு, கல்விச்சூழல், பாடசாலைகளில் அதிபரின் தலைமைத்துவம், பெற்றோரின் ஒத்துழைப்பு வகுப்பறைக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுதல், ஆசிரியர் தொழில்சார் பயிற்சியின் கூறுகளை இற்றைப்படுத்துதல் என்பனவும் அத்தியாவசியமானவை. கற்றல் - கற்பித்தல் : மேம்பாட்டுக்கான வழிமுறை என்ற இந்நூல் இத்தகைய விடயம் பற்றிய கருத்துக்களையே முன்வைத்துள்ளது. இந்நூலில் இடம்பெறுகின்ற கட்டுரைகள் கல்வித்துறை மேம்பாடு பற்றிச் சிந்திப்போர், அத்துறையில் பணிபுரியும் சகல தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்குமென நம்புகின்றேன். 
முன்னைய காலம் போலன்றித் தற்போது இலங்கையில் ஆசிரியர்கள் அனைவரும் தொழில்முறைப் பயிற்சியுடையவர்களாக இருத்தல் வேண்டும் என்னும் கொள்கை பெரிதும் வலியுறுத்தப்படுகின்றது. ஆயினும், நடைமுறையில் 30 ஆயிரம் பேர்வரை பயிற்சியற்றவர்களாகப் பணிபுரிகின்றார்கள். இந்நிலையில் பயிற்சி பெற்ற ஆசிரியரும் பயிற்சி பெறாத ஆசிரியரும் தமது கல்வியறிவை மேம்படுத்துவதற்கான மற்றொரு வழி கல்வியியல் நூல்களையும் சஞ்சிகைகளை ஊன்றிக் கற்பதாகும். இச்செயற்பாட்டுக்கு எமது நூலும் பங்களிப்புச் செய்யும் என நம்புகிறோம். 
இத்தருணத்தில் இத்தகையதொரு நூலை வெளியிட வேண்டும் என ஆலோசனைகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்கிய கல்விப்பீடத் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களுக்கும், ப


அருளானந்தம் சிறீகாந்தலட்சுமி
Arulanandam Sri Kanthaluxmy

அருளானந்தம் சிறீகாந்தலட்சுமி கல்விசார் நூலகராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். தொடர்ந்து நூலகவியல் பண்பாட்டைச் சமூக மட்டத்தில் விருத்தி செய்யத் தனது அறிவு, ஆய்வு சார்ந்த புலங்களை குவியப்படுத்திச் செயற்படுபவர். இவர் கல்விசார் நூலகர் என்னும் பதவியை வெறுமனே அலங்கரிக்கவில்லை. கல்வியின் விரிவாக்கம், அறிவுப் பிரவாகம், நூலக தகவல் அறிவியல் போன்றவற்றை தமிழ்ச் சிந்தனையுடன் தமிழர் வாழ்புலத்துடன் இணைக்கும் முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருபவர். வாசிப்புப் பண்பாட்டின் பன்முகப்பாட்டை வலியுறுத்தும் சமூக செயற்றிட்டங்களை மக்கள் மயப்படுத்துவதில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர்.