புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

வளிமண்டலவியலும் காலநிலையியலும்


    புவியியல் என்பது ஒரு பன்னெறி சார்ந்த கற்கை நெறி. இதில் சமூக, அறிவியல் துறைகளின் பங்களிப்பு இருந்து வந்தாலும், அடிப்படையில் இவ்வறிவுத்துறை பெருமளவுக்கு இயற்கை விஞ்ஞானத்துறையின் செல்வாக்குக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது. பௌதிகவியல், கணிதம், தாவரவியல் போன்ற விஞ்ஞானத்துறை சார்ந்த முறைமைகளை உள்வாங்கி விஞ்ஞானரீதியான ஒரு கற்கை நெறியாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது. 
    மனித சமுதாயத்தின் வாழிடமாக விளங்கும் புவியைப் பற்றிய ஆய்வே புவியியலாகும். இயற்கைச் சூழலின் முக்கிய அம்சமாக விளங்கும் காலநிலை இதன் பிரிவாகக் காணப்படுகின்றது. காலநிலையியல் என்பது பௌதிகப் புவியியலுடன் ஒன்றிணைந்தவொரு பகுதியாக விளங்குகின்றது. இக்காலநிலையியலின் அடிப்படைத் தத்துவங்கள் வளிமண்டலவியலிருந்து பெறப்படுகின்றது. புவிமேற்பரப்பில் காலநிலை, பிரதேசரீதியான மாறுபாடுகளைக் கொண்டிருப்பதுடன், அண்மைக் காலங்களில் மேல் வளித்தாக்கங்களின் பாதிப்பினையும் காணமுடிகின்றது. இதனாலேயே புவியியலாளர்கள் விஞ்ஞான காலநிலையியலில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 
    இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் காலநிலையியல் மற்றும் வளிமண்டலவியல் விஞ்ஞானத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. வானிலை மூலகங்களை அளவிடும் கருவிகளில் தொழில் நுட்பரீதியான பல மாற்றங்கள் ஏற்பட்டன. கணித மாதிரிகளைப் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வானிலைச் செய்மதிகளின் அறிமுகம், அதிவேகக் கணினிகளின் பயன்பாடு காரணமாக, வளிமண்டலவியலில் அபரிதமான மாற்றங்கள் ஏற்பட்டன. இத்தகைய விருத்திகளும், அவதானிப்பு நுட


ஏ.என்.கிருஷ்ணவேணி
Krishnaveny, A.N Dr

கலாநிதி ஏ.என்.கிருஷணவேணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் தத்துவம், நுண்கலைகள் போன்றவற்றில் ஆழமான கற்றலும் தேடலும் கொண்டவர். 

குறிப்பாக, இவர் தமிழ் இலக்கிய மரபை அடிப்படையாகக் கொண்ட 'இரசனைக் கோட்பாடு' பற்றிய தேடுகையிலும் ஆய்விலும் கவனம் செலுத்துபவர். சைவசித்தாந்தம் குறித்து தெளிவாக மாணவர் நோக்கில் எடுத்துரைக்க விழைபவர். இவர் பல்வேறு ஆய்விதழ்களிலும், கருத்தரங்குகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கி வருபவர்.