புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அடிப்படை உளவியல்

'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்று பாரதி பாடினான். தமிழில் புதிய அறிவியல் நூல்களுக்கு பாரதி காலத்தில் இருந்த தேவையை மனங்கொண்டே அவன் அவ்வாறு கூறினான். பாரதி மறைந்து எண்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. பாரதி காலத்தில் கற்பனை பண்ணியிருக்க முடியாத அளவுக்கு புதிய புதிய அறிவுத் துறைகளும் அறிவும் நமது காலத்தில் பன்மடங்காகப் பல்கிப் பெருகியுள்ளன. சமூக வளர்ச்சியும் தனிமனித முன்னேற்றமும் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பெரிதும் தங்கியுள்ள இன்றைய காலத்தில் இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவருவது  முன் எப்போதையும் விட இன்று அவசியமாகியுள்ளது. 
உளவியல் அத்தகைய ஒரு புதிய அறிவுத்துறையாகும். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்ததை விட இன்று உளவியல் பெருவளர்ச்சி கண்டுள்ளது. சமூக வன்முறைகளாலும், யுத்தங்களாலும், இயற்கை அனர்த்தங்களாலும் சமூகமும், குடும்பமும், தனிமனிதரும் பெருமளவு சிதைவுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகும் இன்றைய காலகட்டத்தில் உளவியல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும் தமிழில் உளவியல் நூல்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அந்த வகையில் நவீன உளவியலுக்கு ஒரு அறிமுகமாக அமைகின்ற மணியம் சிவகுமாரின் அடிப்படை உளவியல் என்னும் இந்நூல் வரவேற்கத்தக்க ஒரு முயற்சியாகும்.
திரு.சிவகுமார் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர். தமிழை சிறப்புப் பாடமாகப் பயில்கிறார். தன் பட்டப்படிப்புக்கு மத்தியில் உளவியல், சுகாதார வைத்திய முகாமைத்துவம் ஆகிய கற்கைத் துறைகளிலும் டிப்ளோமா பட்டம் பெற்றவர். அறிவுத்துறை


சி.விஜயகுமார்
Vijayakumar, S

இந்நூலாசிரியர் சின்னத்துரை விஜயகுமார்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் சிறப்புப் பட்டம்  பெற்று அங்கு முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார். இவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி கற்கைநெறியில் முதல்தர சித்தி          பெற்றதோடு அதன் பின்னர் சென்னைப் 
பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணி பட்டத்தினை அதிவிசேட தரத்தில் சித்தியடைந்துள்ளார்.

இவரது இந்நூல் நுண்பாக கோட்பாடுகளை கணிதம் 
மற்றும் வரைபட உதவியுடன் மிகத் தெளிவாக 
விளக்கியுள்ளதுடன் பருநிலைப் பொருளாதாரக் 
குறிக்கோள்களின் விமர்சிப்பாகவும் பயன்தரும் முறையில் கையாளப்பட்டுள்ளது. கெயின்சியவாதம், அதனைத் தொடர்ந்த நாணயவியல்வாதம் என்பவற்றின் கருத்துக்கள் நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்துள்ளன. அவைபற்றி ஆசிரியர் காத்திரமான முறையில் விளக்கி 
ஆராய்ந்துள்ளார். கலப