சிறுவர் கலை இலக்கியங்கள்
|
சிறுவர் தொடர்பான ஆய்வு நூல்கள் காலத்தின் தேவைகளாகவுள்ளன. பெற்றோர், ஆசிரியர், கல்வியாளர், சிறுவருக்கான கலை இலைக்கியங்களை ஆக்குவோர் என்ற அனைவருக்கும் பயன்படும் வண்ணம் இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகளிலே பெருந்தொகையான சிறுவர் இலக்கியங்கள் ஆக்கப்பட்ட வண்ணமுள்ளன. வயதுப் படிநிலைகளைக் கருத்திலே கொண்டு ஆக்கங்கள் எழுதப்படுகின்றன.
கதையாக்கங்கள் வழியாகச் சிறுவர் கற்பனைத்திறனும் கண்டுபிடிப்புத் திறன்களும் வளர்க்கப்படுகின்றன.
சிறுவர் வயது வீச்சுக்கு ஏற்றவாறு பெருந்தொகையான புனைகதை சாரா ஆக்கங்களும் எழுதப்படுகின்றன. நாடகங்கள், திரைப்படங்கள் முதலியனவற்றின் தயாரிப்புக்கள் உளவியல் தழுவி மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுடன் இணைந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்ச் சூழலிற் சிறுவர் கலை இலக்கியங்களை மேலும் வளப்படுத்தவும், ஆழப்படுத்தவும் உளவியல் மயப்படுத்தவும் இந்நூலாக்கம் பயன்படும்.
சபா.ஜெயராசா
|