மேலைத்தேய மெய்யியல்:சில பரிமாணங்கள் |
மனித வரலாற்றின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை ஆரோக்கி யமான அறிவு வளர்ச்சிக்கு மெய்யியலின் பங்களிப்பு முக்கியமானது. இன்று பரிணமித்துள்ள பல்வேறு துறைகளும் மெய்யியல் என்ற தாய் விஞ்ஞானத்தில் இருந்து ஊற்றெடுத்தவையே என்றால் அது மிகை யாகாது. குறிப்பாக மேலைத்தேய மெய்யியலின் விருத்தியினை நாம் பரந்து விரிந்துள்ள பல்வேறு துறைகளின் ஊடாகவும் கண்டுகொள்ள முடிகின்றது. அவை அனைத்தையும் ஒரு நூலின் கண் உள்ளடக்குதல் மிகவும் சிரமமானதாகும். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளையும், சில கோட்பாடுகளையும், சில சிந்தனைகளையும் சுமந்து 'மேலைத்தேய மெய்யியல்: சில பரிமாணங்கள்' என்ற இந்நூல் வெளிவருகின்றது. இந்நூலின் கண் உள்ளடக்கப்பட்டுள்ள கட்டுரைகள் இதுவரை தமிழில் வெளிவந்த மெய்யியல் நூல்களில் பெரிதளவில் விதந்துரைக்கப்படாதவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. |