சூழலியல் உளவியல் கலைவடிவங்கள் |
சூழலியல் என்பது வளர்ந்து வரும் அறிவுத் துறையாகி மேலெழுகின்றது. பல்கலைக்கழகங்களில் அதன் பன்முகத் தன்மைகள் நோக்கிய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உலகளாவிய முறையிலே ஆய்வு மாநாடுகளும், கருத்தரங்குகளும் அறிவுப் பரிமாற்றங்களும் இத்துறையில் நிகழ்த்தப்படுகின்றன. சூழற் பாதுகாப்புத் தொடர்பான அரச நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் உருவாக்கம் பெற்று வருதல் பிறிதொரு தோற்றப்பாடு. சூழலியற் பாதுகாப்புத் தொடர்பான சட்டவாக்கங்களும் இடம் பெறுகின்றன. சூழலியலின் பன்முகப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய நூல் ஒன்றின் தேவை உணரப்பட்டு இந்த ஆக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூழலுடன் தொடர்புடைய உளவியல், சமூகவியல், பண்பாட்டில், கல்வியியல், இலக்கியங்கள், திறனாய்வு முதலாம் துறைகளை உள்ளடக்கிய அகல் அடக்கல் நூலாக இது இடம்பெற்றுள்ளது. |