கற்றல் கற்பித்தல் : மேம்பாட்டுக்கான வழிமுறைகள் |
இன்று நாளாந்தம் சமூகஅறிவியல், இயற்கை அறிவியல் மற்றும் மனிதப் பண்பியல் துறைகளில் ஆராய்ச்சிகளினூடாக அறிவுப் பெருக்கம் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாகப் பாடசாலைகளில் பெறப்படும் அறிவும் திறன்களும் சிறிது காலத்தின் பின் காலாவதியாகிப் போகின்றன. அவை பயனற்றும் பொருத்தமற்றும் போகின்றன.
ஆகவே, பாடசாலைக் காலத்தின் அறிவையும் திறன்களையும் மாணவர்கள் சுயமாகக் கற்றுக் கொள்ள வேணடிய அவசியம் ஏற்படுகின்றன. இதனால் வாழ்நாள் முழுவதும் அறிவையும், திறன்களையும் புதுப்பித்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான், புதிய அறிவியல் தொழில்நுட்ப சமுதாயத்தில் இணங்கி வாழ்வது சாத்தியமாகும்.
எனவே, பாடசாலைக் கல்வியானது மாணவர்கள் விலகிய பின்னரும் புதிய அறிவையும் திறன்களையும் கற்றுக்கொள்வதை இலகுபடுத்தும் முறையில் சுயமாகக் கற்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொடுப்பதாக இருத்தல் வேண்டும். சுயஅறிவு, சுயதேடல், சுயகற்றல் போன்ற அம்சங்களை வலியுறுத்தும் கல்விச் செயற்பாடுகள் எம்மிடையே விரிவுபெற வேண்டும்.
ஆகவே, மாணவர்களது சுய கற்றல், சுயஅறிவு, சுயதேடல் போன்ற பண்புசார் விருத்திக்கமைய கற்றல்-கற்பித்தல் செயன்முறை அமைய
|