நூலக அபிவிருத்தி : ஒரு பயில் நோக்கு |
அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு, வரி, வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம் செலுத்தி அவற்றின் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, சேமிப்பு, பகிர்வு, பராமரிப்பு போன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலக அறிவியல் துறையும், இப்பதிவே டுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம், சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, மீள் பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறை களினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத் தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டை யும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கான வழிவகைகள், தகவல் கையாள்கை மற்றும் பரவலாக்கம் போன்றவற் றில் நூலகங்கள் மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றி கணித வியல், தருக்கவியல், மொழியியல், உளவியல், கணினித் தொழினுட்பம்;, நூலகவியல், தகவலியல், முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன் தொடர்புடையதொன் றாகவும் உள்ள பெருமைக்குரியது. |