புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

நோத் முதல் கோபல்லவா வரை

கலாநிதி அ.ஜெயரத்தினம் வில்சன்
B.A (Hons) . ph.D
அரசியல் விரிவுரையாளர்
இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை
1796இல் பிரித்தானிய படைப்பற்றாட்சியுடனேயே உண்மையில் ஆரம்பமாகும் இலங்கையின் இக்கால வரலாற்றை எழுதுவோர், தம்முன்னுள்ள பணி இலகுவானதொன்றென்று எண்ணவொண்ணாது.  அஃது ஆட்சிமுறை (பரிபாலன) நடவடிக்கைகளின் அல்லது தனித்தனித் தேசாதிபதிகளின் சாதனைகளின் தொகுதி அன்று; அது, பொருளாதார முன்னேற்றம், கல்வி அபிவிருத்தி, சமுதாய வளர்ச்சி, அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஆகிய எல்லாவற்றினதும் சுருக்கமாகும். சுருங்கக்கூறின், இக்கால இலங்கை வரலாறு, சிதைவுற்றுக் கொண்டிருந்த சமுதாய அரசியல் அமைப்பு, இலங்கை ஒரே தீவு என்ற கருத்தினடிப்படையில் ஆக்கப்பட்ட ஒன்றரை நூற்றாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியில் விளைந்த பிண்டமாகிய தேசிய ஒருமைப்பாடாக வலுப்படுத்தப்பட்ட கதையேயாகும். பிரித்தானியரின் வரலாற்றேட்டில் (அ) ஒருங்கிணைக்கப்பட்ட தனி ஆட்சி முறை அமைப்பில், கண்டி மாநிலங்களை இணைத்த கோல்புறூக் கமறூன் விசாரணைக் குழுவின் முடிவுகளின் பின்னர் செயலாக்கப்பட்ட பரிபாலன ஒருமைப்பாடும், (ஆ) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அதுவரை நாட்டின் ஏனைய பகுதிகளோடு தொடர்பு கொள்ளக்கூடிய தகுதி வாய்ந்த போக்குவரத்து வசதிகள் இல்லாமலிருந்த வடமாநில நகரங்களுக்கு உளதாய இருப்புப்பாதை இணைப்பும், அற்ப சாதனைகள் எனக் கருதப்படமாட்டா. இருப்புப் பாதைகள், ஏனைய இணைப்பு வழிகள், புதிதாயுள்ள இயற்கை வளவாய்ப்புத் தொகுதிகளைப் பொருளாதார சுபீட்சத்துக்குப் பயன்படுத்துதல், பரிபாலனச் சீர்திருத்தம் முதலிய அனைத்தும் சமுதாயக் கூட


கவிஞர் துரையர்
Thuraisingam, S

கவிஞர் துரையர் என இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்ட கலாபூஷணம் சு.துரைசிங்கம் அவர்களைக் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அறிவேன். ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக பின்னர் அதிபராக உயர்ந்து வந்தவர் அவர். அவரது பதினாறாவது வயதில், சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி மாணவராக இருந்தபோது அவரது முதலாவது கவிதை வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து பல ஊடகங்களில் எழுதிக் கொண்டிருந்த இவர் 1972இல் தனது தெருவிளக்கு என்ற கவிதை நூலினை வெளிக்கொணர்ந்தார். சிறுவர் பாடல் தொகுதிகள் மூன்று சமயம் சார்ந்த நூல்கள்   மூன்று, புவியியல் சார்ந்த நூல்கள் இரண்டு ஆகியவை  இதுவரை வெளிவந்துள்ளன. கவிக்குரல்கள் என்ற  ஒலிப்பதிவு நாடாவும் இந்து தர்மத்தில் பத்துக்கள் என்ற தொலைக்காட்சித் தொடரும் கூட இவரால் தயாரிக்கப்பட்டவை. இந்து தர்மத்தில் பத்துக்கள் மாணவர்களுக்கு மிகப் பயனுள்ள த