புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கொன்றைவேந்தன்

கொன்றைவேந்தன் என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த ஒளவையார் என்னும் மெல்லியலார் அருளிய நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும் பல தனிப்பாக்களும் ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக் குறித்து எத்துணையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து  விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுக்கள் புறநானூறு முதலிய சங்க நூல்களிற் சேர்க்கப்பட் டுள்ளன. அவர் அதியமான் என்னும் வள்ளல் அளித்த அமுதமயமான நெல்லிக்கனியை உண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்தனரெனச் சங்க நூல்கள்  தெரிவிக்கின்றன. எனினும், 'சங்ககாலத்து ஒளவையாரும் வேறு, கம்பர் காலத்து ஒளவையாரும் வேறு' என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும். 
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவை யென்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதிநூல்களேயாகும். தமிழ் நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக்கொள்ளப் பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையா ரெவரும் ஒளவையாரின் நீதி நூல்களில் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துக்களும் ஆத்திசூடியிலும், கொன்றை வேந்தனிலும் சிறுசிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்குகின்றன. இளம் பருவத்தினர் ச


பி.இராமநாதன்
Ramanathan, P

அறிஞர் பி.இராமநாதன் மொழியியல் வரலாறு , அகழ்வாய்வு முதலிய துறைகளில் ஆழங்காற்பட்டவர். தமிழியம் தழைத்தற்கு அடிப்படையான எழுத்துப்பணியில் ஈடுபட்டிருப்பவர். இவர் தமிழ் முந்து செம்மொழி என்பதை நிலைநாட்டும்வகையில் அதன் தொன்மையையும் பண்டைத் தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்புக்களையும் ஏரண நெறிப்படி எடுத்து விளக்கி தொன்மைச் செம்மொழி தமிழ் என்னும் நூலையும் எழுதியுள்ளார். இந்நூல் செம்மொழி பற்றியும் தமிழின் எதிர்காலம் பற்றியும் பல்வேறு புலனங்களையும் தாங்கியுள்ளது.