புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பால் நிலா

பால்முகம் மாறாப் பாலகனே
        பால்சோறு உண்ண ஓடிவா
கால்கள் தரையில் படாமலே
        காற்றாய்ப் பறந்து ஓடிவா

ஆச்சி கறந்த பாலை
        அம்மா காய்ச்சி வாறேன்
போச்சி நிறையத் தாறேன்
        பொன்னே நீயும் வாராய்

அண்ணன் வந்தால் பறிப்பான்
        அக்கா கண்டால் மறிப்பாள்
கண்ணே ஓடி வாடா
        கனிரசம் உண்டு போடா

சின்னக் கண்ணா வாடா
        சின்னக் காலால் வாடா
அன்னம் உண்ண வாராய்
        அம்மா மகிழப் பாராய்


ச.சத்தியசீலன்
Sathiaseelan, S Prof

பேரசிரியர் முனைவர் சமாதிலிங்கம் சதியசீலன் கடந்த 32 ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பணிபுரிந்து வருகின்றார். இலங்கையில் புரையோடியுள்ள இனவாத அரசியலைப் புரிந்து கொள்வதற்கான அறிவு ஆய்வு சார்ந்த பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார். 

தமிழ்பேசும் மக்களது சுயத்துவத்தின் அடையாள இருப்பிற்கான வரலாற்றுணர்வின் தொடர்ச்சியை கருத்து நிலைத் திரட்சியை நுண்ணியதான ஆய்வு மூலாதாரங்கள் மூலம் கருத்தாடல் செய்கிறார். பாரம்பரிய பெருமித உணர்வைக் கட்டமைக்கிறார்.