புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

நாட்டாரியற் கல்வி

நாட்டார் வழக்காறுகள் வழியாகக் கல்விக் கையளிப்பு எவ்வாறு நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது என்பது தமிழ்ச் சூழலில் இன்னமும் விரிவாக ஆராயப்படவில்லை.
அவ்வகையில் இந்நூல் ஒரு முன்னோடி ஆக்கமாகும். நாட்டாரியல் ஆய்வரங்குகள் பல்கலைக்கழகங்களிலே இடம்பெற்று வந்தாலும் நாட்டாரியலையும் கல்வியியலையும் தொடர்புபடுத்திப் பார்க்கப்படாத விசாலித்த இடைவெளி காணப்பட்டது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற ஆய்வரங்கு ஒன்றிலே அத்தகைய ஆய்வுகளின் முக்கியத்துவம் உரத்து முன்வைக்கப்பட்டது.
பேராசிரியர் நா.வானமாமலையும் பேராசிரியர் தே.லூர்தும் தமிழ் நாட்டாரியல் ஆய்வுகளின் வழியாகப் புதிய புலக்காட்சிகளைத் தோற்றுவித்தனர்.
அவர்கள் மேற்கொண்ட ஆய்வுத் தளங்களில் நின்று, ஆராயப்படாத புதியதொரு துறையை நோக்கி இந்த ஆக்கம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஆழ்ந்து நோக்கும் பொழுது நாட்டார் வழக்காறுகள் அனைத்தும் கல்விப் பெறுமானங்களையே சுமந்து நிற்றல் தெளிவாகப் புலப்படும்.
சபா.ஜெயராசா

 


தி.வேல்நம்பி
Velnampy, T Dr

முனைவர் திருநாவுக்கரசு வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முகாமைத்துவத்துறையில் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார். இவர் கணக்கியல், வர்த்தகம், முகாமைத்துவம் தொடர்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் பயிற்சியும் தேடலும் தமிழ் மரபு பண்புசார் புலங்களுடன் ஊடாடி புதிய ஆய்வுத் தோற்றப்பாடுகள் உருவாக்கவும் ஆர்வம் கொண்டவராக உள்ளார். முகாமைத்துவச் சிந்தனையாளர் தமிழியல் ஆய்வுச் செல்நெறிகளுள் உள்வாங்கப்படுகின்றார். இதன் இன்னொரு வெளிப்பாடாகவே முகாமைத்துவமும் திருக்குறளும் என்னும் நூல் அமைகின்றது.