புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சாடிகள் கேட்கும் விருட்சங்கள்

சில நாட்களின் முன்னர் கனடாவில் வாழும் எனது ஊரவரும் நண்பருமான மோகன் இலங்கையில் இருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்துக் கவிஞர் முகிலனை அறிமுகம் செய்து வைத்தார்.
நான் சிலகாலமே அனுபவித்த நெடுந்தீவின் காவிய வாழ்வை முழுமழியாக வாழக் கொடுத்து வைத்தவர். அவர் சில வருடங்கள் நான் படித்த நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் படித்திருக்கிறார். நானும் என்னுடைய தோழர்களும் தோழியர்களும் ஆடியும் பாடியும் கூடியும் திரிந்த வீதிகளிலும் புல்வெளிகளிலும் கடற்கரைகளிலும் தனது தோழ தோழியருடன் என்னைவிட அதிக காலம் செளித்திருக்கிறார். நான் படிக்க விரும்பி வாய்க்காதுபோன ஊடகத்துறை பயில்கிறார். 
போரின் மத்தியிலும் வாழ்வு முகிலனுக்கு என்னைவிட அதிக வாய்ப்புக்களைக் கொடுத்திருக்கிறது. 
எனக்கு கவிதை தந்த மண்ணில் நிரந்தரமாக வாழும் முகிலன் மீது எனக்கு ஒருவகையில் பொறாமை ஏற்படுகிறது. அது ஏனென்று கேட்டால் நான் என்ன சொல்லக்கூடும்?
எனது தீவகத்துக்கு முதன் முதலில் வந்தபோது எனக்கு பாலப் பருவம் முடியவில்லை. எனது தந்தையார் நெடுந்தீவு என் தாயாரின் தந்தையாரும் நெடுந்தீவு, என் தாய்வழிப் பாட்டிக்கு தாய் நெடுந்தீவு தந்தையார் உடுவில், உடுவில் எனக்கு குருவிக்கூடுபோல. அப்பதான் சிறகுவிரித்த பறவைக் குஞ்சைப்போல சின்னஞ்சிறு வயதில் நான் நெடுந்தீவுக்கு வந்து சேர்ந்தேன். முதற்காதலின் காவிய வாழ்வு எனக்கு அங்குதான் வாய்த்தது. அங்கு என்னை அரவணைத்த நீலக் கடலும் நீல வானமும் வரட்சிக்கு அடங்காது பசும்கொடி தூக்கும் மண்ணும் ஒன்றில் காதலில் சா அல்லது மோதலில் சா என்று (எங்கள் ஊரில் இதை கொஞ்சம் கொச்சை


மு.பொன்னம்பலம்
Ponnambalam, M

1950களின் இறுதியிலிருந்து இன்றுவரை தீவிர இயக்கம் கொண்டவர். இவர் ஈழத்தின் நவீன கலை இலக்கிய பரப்பில் முக்கியமான ஆளுமை. கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமரிசனம், கட்டுரை என பல்வேறு களங்களிலும் இயங்கி வருபவர். தமக்கென்று கருத்துநிலைத் தெளிவு கொண்டவர். அதன் வழியே படைப்பாக்க உந்துதல் கொண்டு ஆத்ம தரிசனத்தின் பன்முகத்தை ஆராயும் பண்பை படைப்பாளுமையாக வெளிப்படுத்துபவர்.
மரபு வழியான அறிதல்முறை படைப்பாக்க முறைமை முதற்கொண்டு நவீனத்துவமான அறிதல்முறை, சிந்தனைமுறை சார்ந்து சுய விசாரணையில் ஈடுபடும் முதிர்ச்சியும் பக்குவமும் இவரது தனித்தியல்பாக உள்ளது. இதுவே சிறார் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு அதன் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தன்னாலியன்ற பங்களிப்பை வழங்க முடிகின்றது.
 
சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இலக்கியம் படைக்கும்