புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

மாற்றமுறும் கல்வி முறைமைகள்

கடந்த ஐந்து தசாப்த காலப்பகுதியில் கல்வியியல் கற்கைநெறி சார்ந்த 200 நூல்கள் வரை இலங்கைக் கல்வியாளர்களால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன என்பதை எமது மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது (இது பற்றிய நூற்பட்டியலொன்றை அண்மையில் தயாரித்து வெளியிட்டுள்ளோம்). கல்விப் புலத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மற்றும் கல்வியியல் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் இத்துறையில் ஒரு முக்கிய பங்களிப்பைச் செய்திருப்பதை இவ்விடத்து உளமாரப் பாராட்டுகின்றோம். இக்கல்வியியல் எழுத்துப் பணியின் தொடர்ச்சியாகவே இந்நூல் வெளிவருகின்றது. சேமமடு பதிப்பகம், அதன் உரிமையாளர் திரு.பத்மசீலன் ஆசிரியம் சஞ்சிகை ஆசிரியர் திரு.மதுசூதனன் ஆகியோர் இக்கல்வியியல் நூல் வெளியீட்டுப் பணியில் முன்னின்று உழைத்து வந்துள்ளனர். இந்நூல் வெளியீட்டையும் முன்னின்று செயற்படுத்துபவர்களும் அவர்களே. இவ்வகையில் தமிழ்க் கல்வியுலகம் அவர்களை சிறப்பாகப் பாராட்டிக் கௌரவிக்க வேண்டிய கடப்பாடொன்றுண்டு.

கல்வியியலைப் பல்கலைக்கழக மட்டத்தில் கற்க முற்பட்ட முன்னோடிகளுள் நானும் ஒருவன். 1964ஆம் ஆண்டளவில் நான் பேராசிரியர் சபா. ஜெயராஜாவுடன் ஒரு காலை மாணவனாகக் கல்வியயலைக் கற்கத் தொடங்கிய காலத்தில் ஒரு தமிழ் நூலாவது உசாத்துணையாக கிடைத்ததாக ஞாபகமில்லை. எங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பல சிரமங்களுடன் ஆங்கிலக் கல்வியியல் நூல்களைப் படித்தோம். எவ்வாறாயினும் கடந்த 50 ஆண்டு காலப்பகுதியில் மொத்தத்தில் 200 கல்வியியல் நூல்கள் வந்திருப்பது ஒரு வகையில் பாராட்டத்தக்கது. ஆனால் மறுபுறம், சராசரியாக ஆண்டுக்கு நான்கு நூல்களே என்று சிந்திக்கும் போ


ச.முத்துலிங்கம்
Muthulingam, S

பேராசிரியர் முனைவர் ச.முத்துலிங்கம் கல்வியியல் துறைசார் முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர். இவர் தமிழில் கல்வியியல் துறையின் விரிவுக்கும் ஆராய்ச்சிக்கும் புதுத்தடம் அமைத்துக் கொடுத்தவர். இன்று கல்வியியல் பன்துறை அறிகை மரபுகளின் குவிமுனையாக தமிழில் மேலெழுச்சி பெற்று வருவதற்கு தெளிவான சிந்தனைப் புலத்தையும் ஆய்வுக் களத்தையும் உருவாக்கி வளர்த்தெடுப்பதில் பெரும் பங்கு கொண்டவர். கலவி உளவியல் எனும் பொருட்பரப்பில் ஆசிரிய மாணவர்களை முழுமையாக ஈடுபாடு கொள்ளவும் இச்சிந்தனைத் தொடர்ச்சியின் முளுமையை உள்வாங்கவும் சாதகமான சூழலை உருவாக்க முன்னின்று உழைத்தவர். இத்துறைசார் அடிப்படை எண்ணக்கருக்களை அறிக்கை மரபுகளை தமிழில் தெளிவாக எடுத்துரைக்கும் முறைமைக்குத் தடம் அமைத்தவர்.