புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அழகியல்

தமிழில் 'அழகியல்' தொடர்பான அடிப்படை நூல்கள் இன்னும் தெளிவாக உருவாக்கப்படவில்லை. அதாவது, அழகியல் தொடர்பான தத்துவார்த்தச் சொல்லாடல்களை எண்ணக்கருக்க-ளை முன்வைத்து கோட்பாடாக்கம் செய்யப்பட்ட நூல்கள் எழுதப்-படவில்லை. ஆங்காங்கு அழகியல் தொடர்பான சில கட்டுரைகள் மட்டுமே வெளிவந்துள்ளன. ஆனால், இவை அழகியல் தொடர்-பான அடிப்படை விளக்கத்தைக்கூட முழுமையாக வெளிப்படுத்தி உள்ளன எனக் கூற முடியாது.
தமிழில் இலக்கியக் கோட்பாடுகள் பற்றி ஓரளவு பேசப்பட்டாலும் கலைக்கோட்பாடுகள் பற்றி சரியாகப் பேசப்படவில்லை. எந்த ஒரு படைப்புக்கும் பின்னால் ஏதாவது ஒரு கோட்பாடோ பல கோட்பாடுகளோ அடிப்படையாக இருக்-கும். இந்த கலைப்படைப்புகளை எத்தனை கோணங்களிலிருந்து பார்க்க முடியும் என்பதற்கான தெளிவை முன்வைக்கும் பொழுதுதான் 'அழகியல்' பற்றிய தேடல், சிரத்தை மேற்கிளம்பும். 
இந்தத் தேவையை உணர்ந்து தான் அழகியல் அடிப்படை-களை எடுத்துரைக்கும் பாங்கில் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா 'அழகியல்' எனும் இந்நூலை எழுதியுள்ளார். இதுவரை தமிழர் அழகியல், பண்டைத் தமிழர் அழகியல், மார்க்சிய அழகியல் தொடர்பாக சில கட்டுரைகள் சில நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு 'அழகியல்' என்ற எண்ணக்கரு பற்றிய அடிப்படைகளை கலைக் கோட்பாட்டியல் பின்னணியில் இருந்து நுண்ணியதான விளக்கத்தை தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, கலைப்படைப்பு பற்றியும் கலைகள் நுகர்வோருக்கு தரும் அனுபவம் பற்றியும் மேற்கொள்ளும் கருத்தாடல் விடயத் தெளிவைத் தருகின்-றன. பல்வேறு கடினமான பகு


சிவசுப்ரமணியம், த ( தம்பு-சிவா)
Sivasubramaniam, T

இந்தத் தொகுதியைத் தந்துள்ள தம்பு சிவா அவர்கள் இதழியலில் நீண்டகால அனுபவ வீச்சைக் கொண்டவர். சளைத்தலின்றி எழுதிக் கொண்டிருக்கும் ஆற்றல் அவரிடத்து மேலும் விசை பெற்றுள்ளது.

இத்தொகுதியில் இடம்பெற்ற அனைத்துக்கதைகளும்  'வெளிமலர்ச்சி நடப்பியல்' சார்ந்தவையாகவுள்ளன. நாளாந்த வாழ்விலே நடப்பவற்றையும் 
கண்டு அனுபவித்தவற்றையும், ஈடுபாட்டுடன் 
நுகர்ந்து கொண்டவற்றையும் உணர்ச்சிகளை ஏற்றித்தருதல் கதைகளிலே காணப்படும் இயல்பாகின்றது. 
நடப்பியலும் உணர்ச்சியியலும், உள்ளுணர்வும் 
வெளிமலர்ச்சி நடப்பியலை நோக்கி நகர்த்துகின்றன.  
வாழ்க்கையின் சம்பவத் துணிக்கைகள் ஒவ்வொரு கதையிலும் நிலைமாற்றம் செய்யப்படும் பொழுது நடப்பு நிலவரங்கள் 
சிலாகித்து மேலெழுந்து நிற்கின்றன.
கதையின் எடுத்துரைப்பு வழியாக 
வாழ்க்கை மற்றும் சமகாலத்தைய சூழல் பற்றிய