புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கற்றல் உளவியல்

வளர்ந்து விரிந்து வியாபித்து வரும் கல்விச் செயற்பாடுகள் கல்வி உளவியலின் தேவையை மீள வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. அறிவுப் பெருக்கை அனைத்து மாணவர்க்கும் ஆழத்துடனும் செறிவுடனும் கையளிப்பதற்குக் கற்றல் உளவியல் பல நிலைகளிலும் பல பரிமாணங்களிலும் துணைசெய்ய வல்லது. கற்றல் உளவியலின் கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்குமிடையேயுள்ள இடைவெளிகளை மீளாய்வு செய்வதற்குரிய தேவையை நண்பர்கள் அவ்வப்போது வலியுறுத்தி வந்தனர். 
பேராசிரியர் வ.ஆறுமுகம், யாழ்.பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் செல்வி சுசிலா அருளானந்தம், கலாநிதி அனுசியா சத்தியசீலன், கலாநிதி த.கலாமணி, கலாநிதி ஜெயலட்சுமி இராசநாயகம், பேராசிரியர் க.சின்னத்தம்பி, கிழக்குப் பல்கலைக்கழகத்துக் கல்வியியற்புலத் தலைவர் பேராசிரியர் ம.செல்வராஜா, கொழும்புப் பல்கலைக்கழகக் கல்வியியற் பீடாதிபதி பேராசிரியர் சோ.சந்திரசேகரன் மற்றும் கலாநிதி எம்.கருணாநிதி ஆகியோர் இவ்வாறான நூலாக்கத்தின் தேவையைப் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளனர். 
புதிய ஆய்வு முடிவுகளை உள்ளடக்கிய நூலாக்கத்தின் தேவையை வேண்டிநிற்கும் நண்பர் தெ.மதுசூதனன் அவர்களும், சேமமடு வெளியீடுகளின் தலைவர் திரு.பூலோகசிங்கம் பத்மசீலன் அவர்களும் நன்றிக்குரியவர்கள்.

 


சசிகலா குகமூர்த்தி
Sasikala Kugamoorthi

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிகின்ற கலாநிதி சசிகலா குகமூர்த்தி அவர்கள் கல்வித்துறையில் சுமார் மூன்று தசாப்தகால அனுபவத்தினைக் கொண்டவராவார். 

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்ற இவர் ஆசிரியப் பணியில் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வியில் தமிது சாதனைக்காக தங்கப்பதக்கத்துடன் கூடிய டிபளோமாவினையும், அதே பல்கலைக்கழகத்தில் கல்வியில் முதுதத்துவமானி பட்டத்தையும் பின்னர் ஆசிய அபிவிருத்திவங்கியின் புலமைப்பரிசில் பெற்று தமிழ்நாட்டின் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வியில் ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டவராவார்.