புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தாய்மொழிக் கல்வியும் கற்பிக்கும் கலையும்

கோளமயமாக்கலின் எதிர்விளைவுகள் தாய்மொழிகள் மீதான சந்தேகங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. கல்வியியல் நோக்கில் தாய்மொழியின் விசைப்பாடுகளை அறியத் தவறிவிடுமளவுக்கு கோளமயமாக்கல் எதிர்விசையின் அழுத்தங்கள் எழுகை கொண்டுள் ளன. இந்நிலையில் தாய்மொழி பற்றிய தெளிவான புலக்காட்சியைத் தருக்க நோக்கிலும் ஆய்வு நோக்கிலும் வெளிப்படுத்துமாறு நண்பர் கள் நீர்வைப் பொன்னையன், தம்பு சிவசுப்பிரமணியம், தெ.மதுசூதனன், உலகநாதர் நவரத்தினம் ஆகியோர்  வேண்டிக்கொண்டனர். 
தாய்மொழி வழிக்கல்வி என்பது உலக மொழிகளையோ, பிராந் திய மொழிகளையோ கற்றுக்கொள்வதற்குத் தடையான செயற்பாடு அன்று என்பதனை முதற்கண் நினைவு கொள்ளல் வேண்டும். உலகின் பெரும்பாலான மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பரிச்சியமுடையவர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர். 
மனித மூளையின் ஆற்றல்களை ஆராய்ந்து வரும் நவீன உளவி யலாளர்கள் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளக்கூடிய திறனும், கொள்ளக்கூடிய ஆற்றலும் அதற்கு உண்டு என்பதை வலியுறுத்தியுள் ளனர். நவீன கற்பித்தல் முறையியல்களைப் பயன்படுத்தி மொழிக ளைக் கற்பிக்கும் செயற்பாடுகள் வளர்ச்சியடையும் பொழுது பாட சாலைகள் 'மொழித் தொழிற்சாலைகளாக' மேலெழுகை கொள் ளும். நிதானமாக நோக்கும்பொழுது, தாய்மொழியின் நிராகரிப்பு கல்வியின் நிராகரிப்பு ஆகின்றது. 
நூலாசிரியர் 


கி.புண்ணியமூர்த்தி
Punniyamoorthy, Krishnapillai Prof

கிருஸ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி மட்டக்க்ளப்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராக - ஆசிரிய கல்வியாளராகப் பணிபுரிகின்றார். நிறைய அனுபவம் கொண்டவர். இவர் கற்றல் கற்பித்தல் பணியுடன் மட்டமுல்லாமல் ஆய்வாளராகவும் தன்னை வளம்படுத்திக்கொண்டவர். தொடருறு கல்விச் செய்றபாட்டின் பண்புசார் கல்வி தரவிருத்திக்காகச் கல்விச் சமூகத்தின் பல தளங்களிலும் தீவிர இயக்கம் கொண்டவர். 

சுயதேடல், சுயகற்றல், மற்றும் ஆய்வுசார் பண்பாட்டு மயமாக்கலில் புத்தாக்கமாகப் புத்துணர்ச்சியுடன் ஈடுபட்டு வருபவர். கோட்பாடும் பிரயோகமும் சார்ந்து புதிய ஆய்வுக் களங்களை வெளிப்ப்டுத்துபவர்.