புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியில் எழு வினாக்கள்

எழுவினாக்கள் எழுபொருள்கள் எனவும் குறிப்பிடப்படும். கல்விச் செயல்முறையின் விரைந்த மாற்றங்களுடன் பிரச்சினை களும் தொடர்ந்து மேலெழுந்த வண்ணமிருக்கும். பிரச்சினைகளைக் குவியப்படுத்தும் கருத்தாடல்கள் செல்லும் வழியைச் செம்மைப் படுத்த உதவும்.
எழுபொருள்களின் கருத்தாடல் முக்கியத்துவத்தை அறிந்து பல்கலைக்கழகங்களும் ஆசிரிய கலாசாலைகளும், கல்வியியற் கல்லூரிகளும் தத்தமது பாடத்திட்டங்களில் இதனை உள்ளடக்கி வருகின்றார்.
கல்வியியல் சார்ந்த கருத்துக்களையும், முன்மொழிவுகளையும் திறனாய்வின்றி உள்வாங்கும் அறிவூக்கமற்ற நிலையிலிருந்து விடுபட வைப்பதற்குரிய கருத்தாடல்கள் பலநிலைகளிலும் வேண்டப்படு கின்றன. திறனாய்வும், மீள்வாசிப்பும் இன்றி முன்னேற்றங்களை எட்ட முடியாது.
கல்வியியல் அதற்கென உரிய தனித்துவமான சொல்லாடல் களைக் கொண்டுள்ளது. அறிவு நீண்டு வளர்ந்து செல்லும்பொழுது அதற்குரிய புதிய புதிய கலைச்சொற்களும் தோற்றம்பெற்ற வண்ண மிருக்கும். அந்த நடப்பியலைப் புரிந்துகொள்ளும் பொழுது புதிய சொற்கள் மலைப்பை உண்டாக்காது மகிழ்ச்சியை உண்டாக்கும். சொற்பெருக்கு மொழி வளர்ச்சியின் சுட்டியாகும். 
இந்நூலாக்கத்துக்குத் துணை புரிந்த நண்பர்களும், சேமமடு பதிப்பகத்தினரும் நன்றிக்குரியவர்கள். பயனுள்ள நூல்களைத் தந்த பிரித்ததானிய கழக நூலகத்தினருக்கும் நன்றி
சபா.ஜெயராசா


சந்திரசேகரப் பண்டிதர்
Chandrasekara Pandithar

மிக்க அரிதிற் கிடைப்பனவாகிய, அச்சுப்பதிவுப் பெற்ற தமிழ் நூல்களையும் இன்னும் அச்சில் வராத தமிழறிஞர் சிலரது ஆக்கங்களையும் அச்சுப்பதிவு செய்து அவற்றைத் தமிழ் பயிலும் மாணவரிடையே பரப்பும் பெரும் முயற்சியினை மேற்கொண்டுள்ள தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமிகு. கோ.இளவழகனார் அவர்களுக்குத் தமிழ்க் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. 
திரு.ந.சி.கந்தையாப்பிள்ளையின் எழுத்தாக்கங்களை முதலிலே வெளிக்கொணர்ந்து, அவற்றைத் தொடர்ந்து வித்துவான் தி.வே.கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி எனும் பதினேழு நூல்களைக் கொண்டப் பெருந்தொகுதியினை வெளியிட்டுள்ள நண்பர் இளவழகனார் இப்பொழுது யாழ்ப்பாணத்து அகராதியெனவும், மானிப்பாய் அகராதியெனவும் அழைக்கப்பெறும் கையகராதியினை வெளியிடுகின்றார்.
இவ்வெளியீடு பற்றி  இவ்வெளியீட்டின் ஈழத்து முகவர் திரு.பத்மசீலன் என்னிடத்துக் க