புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

வளிமண்டலவியலும் காலநிலையியலும்

புவியியல் என்பது ஒரு பன்னெறி சார்ந்த கற்கை நெறி. இதில் சமூக, அறிவியல் துறைகளின் பங்களிப்பு இருந்து வந்தாலும், அடிப்படையில் இவ்வறிவுத்துறை பெருமளவுக்கு இயற்கை விஞ்ஞானத்துறையின் செல்வாக்குக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது. பௌதிகவியல், கணிதம், தாவரவியல் போன்ற விஞ்ஞானத்துறை சார்ந்த முறைமைகளை உள்வாங்கி விஞ்ஞானரீதியான ஒரு கற்கை நெறியாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது. 
    மனித சமுதாயத்தின் வாழிடமாக விளங்கும் புவியியலைப் பற்றிய ஆய்வே புவியியலாகும். இயற்கைச் சூழலின் முக்கிய அம்சமாக விளங்கும் காலநிலை இதன் பிரிவாகக் காணப்படுகின்றது. காலநிலையியல் என்பது பௌதிகப் புவியியலுடன் ஒன்றிணைந்தவொரு பகுதியான விளங்குகின்றது. இக்காலநிலையியலின் அடிப்படைத் தத்துவங்கள் வளிமண்டலவியலிருந்து பெறப்படுகின்றது. புவிமேற்பரப்பில் காலநிலை, பிரதேசரீதியான மாறுபாடுகளைக் கொண்டிருப்பதுடன், அண்மைக் காலங்களில் மேல் வளித்தாக்கங்களின் பாதிப்பினையும் காணமுடிகின்றது. இதனாலேயே புவியியலாளர்கள் விஞ்ஞான காலநிலையியலில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 
    இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் காலநிலையியல் மற்றும் வளிமண்டலவியல் விஞ்ஞானத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. வானிலை மூலகங்களை அளவிடும் கருவிகளில் தொழில் நுட்பரீதியான பல மாற்றங்கள் ஏற்பட்டன. கணித மாதிரிகளைப் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வானிலைச் செய்மதிகளின் அறிமுகம், அதிவேகக் கணினிகளின் பயன்பாடு காரணமாக, வளிமண்டலவியலில் அபரிதமான மாற்றங்கள் ஏற்பட்டன. இத்தகைய விருத்திகளும், அவதானிப்பு நுட்ப முற


செ.சிவலிங்கம்
Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் ச