புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமூகவியல் சமூகமானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்

சமூக விஞ்ஞானங்களில் (Social Sciences) முதன்மையான துறையாகக்கருதப்படும் சமூகவியல் (Sociology) வயதில் இளையது. 19ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இத்துறை இன்று அகலக்கால் பதித்து ஏனைய சமூக விஞ்ஞானங்களை விட ஆய்வுத் துறையில் முன்னணி வகிக்கிறது. சமூகத்தையே தனது ஆய்வுத் தளமாகக்கொண்டியங்கும் இத்துறைக்கு வரவேற்பு பலமானதாகும். வட ஆபிரிக்காவில் பிறந்த இப்னு கல்தூனின் (Ibnu Khaldun) சிந்தனையில் உருவான இத்துறை மேற்கேத்தேய அறிஞர்களினால் வளர்த்தெடுக்கப்பட்டது. சமூகவியலைப் போன்றே, மானிடவியலும் மனிதனை ஆராயும் தளமாகக்கொண்டியங்கும் துறையாகும்.
இந்தவகையில், சமூகவியல், சமூக மானிடயவியல் என்பவற்றின் அடிப்படை எண்ணக்கருக்களை பற்றிய தமிழ் மொழி மூல நூல்கள் மிகவும் குறைவாகும். அதனை நிவர்த்தி செய்யும் முகமாக இவ்வாறான ஒரு கன்னி முயற்சியில் இறங்க தீர்மானித்தேன். அந்த முயற்சியின் பலனாக உருவானதே இந்நூலாகும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமன்றி, சாதாரண பொதுமக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு எண்ணக் கருக்களையும் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் பல உபதலைப்புக்களுடனும், உதாரணங்களுடனும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சமூகவியலை போன்று மானிடவியலும் ஒரு விரிந்த துறை என்பதால், முக்கியமான மானிடவியல் எண்ணக்கருக்கள் மாத்திரமே இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கலாநிதியு.றமீஸ்,

 


க.குணராசா ( செங்கை ஆழியான் )
Kunarasa, K

கந்தையா குணராசா ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலில் செங்கை ஆழியான் ஆக அடையாளம் காட்டுபவர். இவர் சிறுகதை, நாவல், ஆய்வு, தொகுப்பு எனப் பன்முக்க் களங்களில் இயங்குபவர். இவரது படைப்பாளுமையால் மிக வெற்றிகரமான எழுத்தாளர் எனும் அந்தஸ்துக்கு உரித்தானவர். 1960களின் நடுப்பகுதியில் இருந்து இன்றைய காலம்வரை செங்கை ஆழியான் பெயரைத் தவிர்த்து ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படமுடியாது.

இவர் தொகுத்த மறுமலர்ச்சிக் கதைகள், ஈழகேசரிக்கதைகள், முன்னோடிச் சிறுகதைகள் போன்றவை ஈழத்துச் சிறுகதை வரலாற்றை மீள் வாசிப்புக்கு உள்ளாக்கும் விமரிசனப் பண்புகள் கொண்டவை. இத்தொகுப்பு முயற்சியில் இவர் ஈடுபட்டதன் மூலம் இலக்கிய வரலாறு எழுதியலுக்குப் புதுவளம் சேர்க்கின்றார். இதன் பிறிதொரு அடையாளமாகவே ஈழத்துத் தமிழ் சிறுக