புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கதைக் கனிகள்

அமரர் வி.அரியநாயகம் அவர்களின் புனைவுகள் தனித்துவமானவை. கதையுரைக்கும் நீண்ட மரபினதும் கற்பித்தல் நெடுவழியின் பதிவுகளினதும் அனுபவச் சுவடுகளைத் தாங்கியவையாக அவரது ஆக்கங்கள் முகிழ்ப்புக் கொண்டுள்ளன. கதை சொல்லலில் விளைவின் (Effect) முக்கியத்துவத்தை முன்னெடுக்கும் ஆசிரியர் அதன் வழியாக விழுமியக் கையளிப்பை மேற்கொள்ளும் இலக்கை முன்னெடுத்துள்ளார். அந்நிலையில் அவரது ஆசிரியத்தின் செவ்வழி புலப்படு கின்றது.

கதை கேட்போரின் அறிகைத்தளம், சொல்லும் பொருளின் உட்பொதிவு, எடுத்துரைப்பு முறைமை, விளைவுகளின் சலனம் முதலிய பரிமாணங்களை உள்ளடக்கியதாகக் ஷகதைக்கனிகள் மேலெழுகின்றன. கதை நகர்த்தலின் தொடர்ச்சி கற்பித்தலின் நகர்ச்சியாகின்றது. 
 
கற்பித்தலும் கதை சொல்லலும் கதைக்கனிகளிலே ஒன்றிணைந்து சங்கமிக்கின்றன. கற்பித்தலின் பரிமாணங்களுள் ஒன்றாகிய உளவியலும் கதைகளிலே உட்புகுந்துள்ளது.  சிறப்பாக அறிகை உளவியல், மானிட உளவியல் முதலியவற் றின் அசைவுகள் கதைகளிலே விரவியுள்ளன. 
 
இங்கு கதைகளை முகாமைப்படுத்தும்|  கையாட்சியும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘கதை முகாமை” என்ற எண்ணக்கரு கதை மீது செலுத்தப்படும் கட்டுப்பாட்டையும், நெறியாள்கையையும், வினைப்படும் இயக்க முன்னெடுப்புக்களையும் கு

மா.கருணாநிதி
Karunanithi, M Prof

முனைவர் மா.கருணாநிதி கொழும்புப் பல்கலைகழகத்தில் கல்வியியற் துறை முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர் தொடர்ந்து கல்வியியல் கற்கையின் விரிவும் ஆழமும் மிக்க சிந்தனை செயல் குவிமையத்தின் விசைப்படுத்துனராகவும் உள்ளார். 

வளமானதும் வினைத்திறன் மிக்கதுமான ஆசிரிய தொழில்சார் கல்வியின் தேவையையும் முக்கியத்துவத்தையும் ஆசிரியர் சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வதிலும், அவை சார்ந்த விழிப்பணர்வு ஏற்படுத்துவதிலும் முனைப்புடன் இயங்கிவருகிறார்.
 
தொடர்ந்து மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு ஆசிரியத் தொழில்சார் கல்வி பல்வேறு புத்தாக்கங்களுக்கும் புதுவிசைகளுக்கும் உட்படுத்தப்பட்டு ஆசிர