புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாறு

'ஈழத்துச் சிறுகதை வரலாறு' என்ற இந்நூலை ஆக்குவதற்குத் தகவல் திரட்டுவதிலும், அனைத்துச் சிறுகதைகளையும் கூடிய வரை படிப்பதிலும் அதிக காலத்தை நான் எடுத்துக்கொண்டேன். 400 சிறுகதைப் படைப்பாளிகளையும், 274 சிறுகதைத் தொகுதிகளையும், சுமார் எண்ணாயிரம் வரையிலான பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவந்த சிறுகதைகளையும் கொண்ட குறுகிய வரலாறுதான் ஈழத்துச் சிறுகதை வரலாறு. எனினும், நமது சிறுகதை இருப்பினை அடையாளம் காண்கின்ற முயற்சியும், அதன் மூலம் நாம் தமிழிலக்கியத்தில் - குறிப்பாகச் சிறுகதைத் துறையில் அடைந்துள்ள வளர்ச்சியையும் கணிப்பீடு செய்வதில் நிறைய இடர்பாடுகளுள்ளன. இன்று வரையிலான சிறுகதை வரலாற்றையும் வளர்ச்சியையும் பற்றிய கணிப்பீடுகள் சார்புநிலை சார்ந்தவையாகவே விளங்குகின்றன. சமநிலை சார்ந்தவையாகவில்லை. 
மதிப்பீடு என்பது அவரவர் 'சுவை' சார்ந்த விடயமாயினும் ஒரு துறைக்குத் தம் பங்கினைச் செய்தவர்களை அடையாளங் காணாது விடுவதும், அவர்தம் படைப்புக்களைப் பதிவு செய்யாது விடுவதும் இலக்கிய வரலாற்றுத் தவறாகுமென நான் நினைத்தேன். அந்நினைவின் வெளிப்பாடே இந்நூல். என் மதிப்பீட்டினை ஒத்த கருத்தினை ஒரு படைப்பாளி குறித்தோ, ஒரு படைப்புக் குறித்தோ விமர்சக அறிஞர்கள் கொண்டிருந்தபோது, அவர்தம் கருத்துக்களை அவ்வாறே எடுத்தாண்டுள்ளேன், உரியவாறு அவர்களின் உசாத்துணை பதிவு செய்யப்பட்டுள்ளது. 'ஈழத்துச் சிறுகதை வரலாறு' கூடியவரை பூரணமானதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதெனக் கருதுகின்றேன். என் சக்திக்கும் தேடலுக்கும் அப்பாற்பட்டு, சில படைப்புக்களும் படைப்பாளிகளும் விடுபட்டிருக்க வாய்ப்ப


மா.சின்னத்தம்பி
Sinnaththamby, M

மாரிமுத்து சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் பொருளியல், கல்வியியல் ஆகிய இரு துறைகளிலும் துறைபோகக் கற்றவர், கற்றுக்கொண்டிருப்பவர். இந்த இரு புலமைசார் அறிவு, ஆய்வு மரபுகளின் செழுமைகளை உள்வாங்கி புத்தாக்க சிந்தனைகளுக்கு தடம் அமைத்துத் வருபவர். 

இவர் இன்று கல்வியியலில் கல்விப் பொருளியல் என்னும் துறைசார் விருத்தியில் முழுமையான ஈடுபாடு கொண்டிருப்பவர். இவரது தொடருறு சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வுகளும் கல்வியியலில் புதுப் பரிமாணங்களாகின்றன. இதுவே இவரை ஏனைய கல்வியியல் ஆய்வாளர்களிலிருந்து வேறுபடுத்தும் பண்பாகவும் அமைகின்றது. இவரது நூல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.