புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

உறவுகள்

    உதிரத்தில் உருவான உறவு
        உயிருள்ள வரையும் தொடரும்
    சதிரத்தில் ஏற்படும் துடிப்பு
        சகவாச தோஷத்தால் பிடிப்பு.

    அண்ணன் தம்பி உறவு
        அக்கா தங்கை உறவு
    மண்ணில் வாழும் வரையும்
        மனதில் நின்று குலவும்

    தந்தை வழி சொந்தம்
        தாய்வழி சொந்தம்
    இந்த உலகில் நமக்கு
        இருந்து வரும் சொந்தம்

    இன்ப துன்பம் இரண்டிலும்
        இரண்டறக் கலந்திடும் சொந்தம்
    அன்பு வழியில் நாமும்
        அரவணைத்து நடப்போம் வாழ்வில்

    தன்னை அடையாளம் காட்டுவது
        தனது சொந்தம் என்பதை
    பிள்ளை நீயும் அறிவாய்
        பெரிதும் பேணி நடப்பாய் 


கே.பொன்னுத்துரை
Ponnuthurai, K

நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கே.பொன்னுத்துரை தனது பதினெட்டாவது வயதில் ஈழநாடு பத்திரிகையின் நிருபராக எழுத்துலகில் காலடி பதித்துப் பின்னர் தினபதியில் செய்தியாளராகவும், 94 இற்குப் பின் தினகரன், இ.ஒ.கூ ஆகியவற்றின் செய்தியாளராகவும் பணி புரிந்துள்ளார். சமூக, சமய, இலக்கிய, கல்வி, கலைச் செயற்பாட்டாளரான இவரின் ஆக்கங்கள் கிருஷ்ண மீரா என்ற புனை பெயரிலும் இலங்கையின் முன்னணி பத்திரிகை சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. கேபிடி எனவும் இலக்கிய உலகில் அறியப்படுபவர். 

இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகள் இல்லாமல் இளைய தலைமுறைப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வருபவர்