புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஆசிரியர் வாண்மையியல்

ஆசிரியர் வாண்மையியல் பற்றிய விரிவான நூல் ஒன்றின் தேவையை தொழிற்சங்கக் கருத்தரங்குகளிலே அவ்வப்போது தெரி வித்து வந்துள்ளனர். நாட்டின் கல்வி வளம் ஆசிரிய வாண்மை வளத்திலே தங்கியுள்ளது. ஆசிரிய வாண்மையின் நலிவு கல்வியின் நலிவாகவும் நாட்டின் ஒட்டு மொத்தமான மேம்பாட்டின் நலிவாக வும் மாற்றமுறும் இயல்பைக் கொண்டது. 
ஆசிரியர் மீதான அக்கறையை வளர்க்கும் அறிகைக் காட்சியை உருவாக்குதலே இந்நூலாக்கத்தின் சிறப்பார்ந்த இலக்காக அமைந் துள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் மிகுந்த நெருக்கடிகளின் மத்தியிலேதான் ஆசிரியர் தமது பணிகளை முன்னெடுக்கின்றனர். எதிர்மறையான அரசியல் தலையீடுகளுக்கும் உள்ளாக்கப்படு கின்றனர். 
அறிவின் பிரவாகத்தை உருவாக்குபவர்களும் அவற்றின் அறைகூவல்களை எதிர்கொள்பவர்களும் ஆசிரியர்களாக இருத்த லினால் அறிவுப் பொருளாதாரத்திலும் அறிவார்ந்த சமூகத்திலும் அவர்களின் வகிபாகம் மேலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கி யுள்ளது. 
மேற்கூறியவற்றின் எழுபுலத்தில் இந்நூல் ஆசிரியருக்கு முன்னீடாகத் தரப்படுகின்றது. இந்நூலாக்கத்துக்குத் துணை நின்ற நண்பர்களும் வெளியீட்டாளரும் நன்றிக்குரியவர்கள். 

சபா.ஜெயராசா


சு.பராமானந்தம்
Paramanantham,S

சுப்பிரமணியம் பரமானந்தம் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக - ஆசிரியக் கல்வியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தொடர்ந்து கற்றல் - கற்பித்தல் பணியுடன் மட்டுமல்லாமல் முழுமையான ஆய்வுப் பணியிலும் ஈடுபாடு கொண்டவர்.
 
கல்விச் செயன்முறை, கற்பித்தலியல், ஆசிரியம் தொடர்பான உரத்த சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வு செய்வதற்குரிய மனப்பாங்கும் உழைப்பும் கொண்டவர். இதற்குரிய கருத்தாடலை வெளிப்படுத்துவதில் வளர்ப்பதில் நிதானமான நேர்நிலை அணுகுமுறையைக் கைக்கொள்பவர்.கோட்பாட்டு வழியிலான மொழியாக்கத்திலும் பிரயோகத்திலும் சமாந்தரமாக இயங்கும் ஆற்றல் கொண்டவர்.
 
சமூக நோக்கும் தத்துவத் தரிசனமும் புலமைத்துவத்தை ஆற்றுப்படுத்தும் என்பதில்  நம்பிக்கை கொண்டவர். இதற்காக தீவிரமாக உழைக்கவும் புத்தாக்கமான சிந்தனைகளை கற்றறியவும் விருப்பம் கொண்டவர்.  புதி