புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பூகோளக் காலநிலை மாற்றம்: பிரச்சிகைகளும் எதிர்காலப் போக்குகளும்

நூலாசிரியர் உரை

பூகோளக் காலநிலை மாற்றம் என்பது பூகோளரீதியாக ஒரு பிரதான பிரச்சினையாக இன்று மாறி வருவதுடன் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் அதனால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியும் வருகின்றனர். இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் பல்வேறு மகாநாடுகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் பல வருடங்களாக முயற்சி செய்து வருகின்றது. எனவே காலநிலை மாற்றத்தின் சிக்கலான விடயங்கள் பற்றியும் பாதிப்புக்கள், எல்நினோ மற்றும் சர்வதேச மகாநாடுகள் பற்றியும் மிக விரிவாக இந்நூலில் ஆராயப்படுகின்றது.
    விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட பொருத்தமான கருவிகளும், தொழில்நுட்பமும், சான்றுகளும் பூகோளம் பற்றிய எமது விளங்கிக் கொள்ளலை மேலும் அதிகரித்துள்ளது. புவியியல் பாடத்தினைப் பரீட்சை நோக்கிலன்றி, அதனை ஆழமாகப் பல்வேறு உதாரணங்கள் மற்றும் விளக்கப் படங்களுடன் மாணவர்கள் விளங்கிக் கொள்ளும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் புவியியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்குத் தரமான நூல்களின் பற்றாக்குறை முக்கியமானதொரு குறைபாடாகக் காணப்படுகின்றது. இலங்கையின் பாடசாலை முறைமையைப் பொறுத்தவரை வகுப்பறைப் பாடம் மற்றும் தனியார் போதனை நிலையங்களில் வழங்கப்படும் போதனை தவிர்ந்த ஏனைய சுயகற்றல் முறைகளினூடாகப் புவியியலைக் கற்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இன்றைய கல்விமுறையின் புதிய நோக்கங்களுக்கமைய மாணவர்கள் சுய கற்போராக விருத்தி பெற வேண்டும் என்னும் குறிக்கோள் ஓர் உயர்தரமான கல்வியின் நோக்காக ஏற்றுக்


விமலா கிருஷ்ணபிள்ளை
Vimala, Krishnapillai Dr

பாடசாலைகள் கல்வி அறிவையும், சிறந்த உளப்பாங்குகளையும், பயனுள்ள திறன்களையும் வழங்கும் இலக்குகளுடன் இயங்கி வருகின்ற போதிலும் இன்றைய சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்கள் காரணமாக, மாணவர்களுக்கு இன்று பல்வேறு துறைகளில் வழிகாட்டலும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன. தொழில், கல்வி, பாடப்பிரிவுகளைத் தெரிதல் போன்றவற்றில் மட்டுமன்றி மாணவர் அடைகின்ற விரக்திகள், பதட்டங்கள், அவர்களிடம் எழுகின்ற அந்தரங்கமான பிரச்சினைகள் பற்றி அவர்களுக்கு நல்வழி காட்ட, இப்பணியில் கோட்பாட்டு அறிவும் செயற்பாட்டு அனுபவமும் மிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இத்துறை சார்ந்த தமிழ் நூல்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கலாநிதி விமலா கிருஷ்ணபிள்ளை அவர்கள் இந்நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மட்டுமன்றி பெற்றோரும் பயனடையக் கூடிய இந்நூல் தமிழ்கூறும் நல்லுலக