புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஜோதியும் சுடரும்

நல்ல எழுத்தாளனுடைய எண்ணக்கருக்களைச் சுமந்து சென்று வாசகனுடைய சிந்தனையிலே தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஆற்றல் அவரால் எடுத்தாளப்படுகின்ற சொற்களுக்குள்ளன் அவனுடைய ஏவலுக்குக் காத்திருப்பனபோன்று அவன் எழுதத்-தொடங்கும்போது பேனாவழியாக காகிதத்தில் சொற்கள் தவழ்-கின்றன் குறுநடை போடுகின்றன் நடமாடுகின்றன் நல்ல வேகமாக ஓடவுஞ் செய்கின்றன. 
காலத்துக்கேற்ப, சொல்லவரும் கருத்துக்கேற்பச் சொற்கள் கீழ்ப்படிந்து செயலாற்றுகின்றன. அவன் சொல்லவந்த கருத்து, ஆற்றலும் அழகுணர்வும் கொண்ட சொற்றொடர்களாக விளங்கி வாசகனுடைய சிந்தைக்கு விருந்து படைக்கின்றன. சொல்-வாகனத்திலே கருத்தைப் பயணிக்க வைத்து அடையுமிடத்தில் உரிய வரவேற்பையும் மனப்பாங்கிலே நன்மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய வலிமை சிறந்த எழுத்தாளனது தேர்ந்தெடுத்த சொற்களுக்குண்டு.
ஆரம்பத்தில் பேரறிஞர் அண்ணாதுரை, கலைஞர் மு.கருணாநிதி, ரா.பி.சேதுப்பிள்ளை போன்றோரது அடுக்கு மொழியினால் கவரப்பட்டும், அதன்பின்னர் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள், டாக்டர் மு.வ, திரு.வி.க, திரு.கி.வா.ஜகந்நாதன், சென்னைப் பல்கலைக்கழக துணை-வேந்தராகவிருந்து இளைப்பாறிய உயர்திரு. நெ.து. சுந்தரவடிவேல் பேராசிரியர் கல்கி போன்றோரது எழுத்து நடையிலே மகிழ்வு கண்டவன் நான். 
ஓரிரு சிறுகதைகள், சில இலக்கிய, சமய கட்டுரைகள், வானொலி மெல்லிசைப் பாடல்கள் சில எழுதியதோடு இரண்டு கவியரங்குகளிற் கலந்திருக்கின்றேன். இவை தவிர மிகுதியாக எதையுஞ் செய்யவும் இல்லை. செய்ய வேண்டுமென்ற எண்ணமும் என்னுள்ளத்தில் எழுந்ததில்லை. பலருக்கும் பயன்-படக்கூடிய வகையில் நல்ல கருத்த


அமிர்தலிங்கம், கோ
Amirthalingam, K

கோபாலபிள்ளை நேசம்மா தம்பதியினரின் மகனாகிய கலாநிதி. கோ.அமிர்தலிங்கம் சம்புர் மகாவித்தியாலயத்தில் தனது பாடசாலைக் கல்வியினைக் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம் என்பவற்றில் தனது பட்டப் படிப்புக்களை மேற்கொண்டுள்ளார். அமரிக்கா, கனடா, ஆர்ஜென்டீனா, சீனா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற பல சர்வதேச மாநாடுகளில் பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ள இவர் கலாநிதி.ரஜித் லக்ஸ்மனுடன் இணைந்து பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் புகழ்பெற்ற சஞ்சிகைகளான Journal of Refugee Studies மற்றும் Disasters என்பவற்றில் பலஆய்வுக் கட்டுரைகளை வெளிட்டுள்ளதுடன் இலங்கையிலிருந்து வெளிவரும் Sri Lanka Economic Journal போன்ற சஞ்சிகைகளிலும் பலஆய்வுக் கட்டுரைகளையும் வெளிட்டுள்ளார். இவரது இலங்கைப் பொருளாதாரம் என்னும் இலங்கையின் பலபல்கலைக்கழகங்களில் தோ்ந்