Mr.Selvamanoharan

திருச்செல்வம் செல்வமனோகரன்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்   இந்து நாகரிகத் துறையின் விரிவுரையாளர். இவர்  'இந்து மெய்யியல்'  துறையை  தனது கற்கையாக, ஆய்வாக, புலமைச் செயற்பாடாக வளர்த்து வருபவர். பின்னைக் காலனிய நோக்கில் இந்து மெய்யியல் சிந்தனைகள்  குறித்து புதிய பொருள்கோடல் மரபை உருவாக்கும் அல்லது  கண்டுபிடிக்கும் அறிவு, ஆய்வு இவரது ஆளுமையின் வெளிப்பாடாகின்றது.   மெய்யியல், இலக்கியவியல், கலையியல் உள்ளிட்ட துறைகளில் ஊடாடித்  தமக்கான விமரிசனச் சிந்தனைசார்  நவீன அணுகுமுறைகளுடன் கூடிய கோட்பாட்டாக்க மரபை உணர்ந்து, தெளிந்து உருவாக்குபவர். இதன் அடையாளமாகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்.  மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையிலான தொடருறு உரையாடலை  வளர்த்து நிதானமாக  இயங்குபவர். தமிழ்ச் சூழலில் 'தமிழர் மெய்யியல்'  குறித்த தேடல் தவிர்க்க முடியாது என்பதை இனங்கண்டு அதன் உருவாக்க முயற்சியிலும் ஈடுபடுபவர்.   மெய்யியல் நோக்கில் புதிய ஆய்வுக்களங்களை இனங்கண்டு புலமை நேர்மையுடன் உழைப்பவர்.  'தூண்டி' இலக்கிய வட்டம் சார்பில் பல்வேறு ஆய்வுக் கருத்தரங்குகளை வழிநடத்தியவர்.  தமிழ்ப் பதிப்பு முயற்சிகளிலிலும் ஆர்வம் கொண்டு 'சிவஞானசித்தியார் ஞானப்பிரகாசருரை' (2017) , 'சிவசங்கர பண்டிதம்' (2016) முதலான நூல்களின் பதிப்பாசிரியர்.  'இலங்கையில் சைவத்தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சியில் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் வகிபாகம் - ஓர் ஆய்வு' (2015)  எனும் நூலையும் ஆக்கித்தந்துள்ளவர்.  தற்போது சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் செயலாளராகவும்  இருந்து தனது சமூகப் பணிகளை மேற்கொண்டு வருபவர்.  

தி.செல்வமனோகரன் புத்தகங்கள்
2017 - சமய நூல் - காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும்
2020 - சமய நூல் - காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும்