புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமகால அரசியல் கலாசார செல்நெறிகள்

‘சமகால அரசியல் கலாசார செல்நெறிகள்” என்ற இந்நூல் 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர்  இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்த ஆய்வரங்குகளில் நூலாசிரியரால் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் விரிவாக்கம் செய்யப்பட்ட விடயங்களும் ஏனைய சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு வெளிவருகின்றது. இதன் தனித்துவம் கடந்த காலத்தில் உலகில் நிகழ்ந்த அரசியல் சம்பவங்களின் பதிவுகள் ஆய்வுகளாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
 
மேலும், சரியான அரசியல் பாரிவையை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் இலங்கையில் வாழும் சிறுபான்மையினரின் அரசியல் இருப்பை வரலாற்று ரீதியில் நிறுவவேண்டிய கடமைப்பாடும் முக்கியமானதாகும். பயங்கரவாதம் என்ற ஓரம்சம் இஸ்லாமியர்களையும் தமிழர்களையும் எப்படி உலக அரசியல் வரைபுக்குள் பாதிக்க வைத்தது என்பது இத்தொகுப்பில் காட்டப்பட்ட பிரதான அம்சமாகும். சாமுவெல் ஹன்ரிங்டன் குறிப்பிடுவது போல் உலகளாவிய  நாகரீகளுக்கிடையே நிகழும் போரில் மேலாதிக்க நாகரிகங்களால் கீழைத்தேச நாகரிகங்கள் (இஸ்லாமியர்களினதும் தமிழர்களதும்) சிதைபட்டு வழக்கிழந்து போகும் துயரத்திலுள்ளன எனக் குறிப்பிட்டார்.  பின்நவீனத்திற்கு பின்பான உலகம் அவ்வகை சிதைப்பின் வேகத்தை அதிகரித்துள்ளது. அறிஞர்களும் சிந்தனையாளர் களும் முற்போக்கு வாதமென கருதும் அம்சங்கள் சமூக இருப்பின்  அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கி வருகிறது.  இதிலிருந்து சமூகங்களோ இனங்களோ அ

சிவசுப்ரமணியம், த ( தம்பு-சிவா)
Sivasubramaniam, T

இந்தத் தொகுதியைத் தந்துள்ள தம்பு சிவா அவர்கள் இதழியலில் நீண்டகால அனுபவ வீச்சைக் கொண்டவர். சளைத்தலின்றி எழுதிக் கொண்டிருக்கும் ஆற்றல் அவரிடத்து மேலும் விசை பெற்றுள்ளது.

இத்தொகுதியில் இடம்பெற்ற அனைத்துக்கதைகளும்  'வெளிமலர்ச்சி நடப்பியல்' சார்ந்தவையாகவுள்ளன. நாளாந்த வாழ்விலே நடப்பவற்றையும் 
கண்டு அனுபவித்தவற்றையும், ஈடுபாட்டுடன் 
நுகர்ந்து கொண்டவற்றையும் உணர்ச்சிகளை ஏற்றித்தருதல் கதைகளிலே காணப்படும் இயல்பாகின்றது. 
நடப்பியலும் உணர்ச்சியியலும், உள்ளுணர்வும் 
வெளிமலர்ச்சி நடப்பியலை நோக்கி நகர்த்துகின்றன.  
வாழ்க்கையின் சம்பவத் துணிக்கைகள் ஒவ்வொரு கதையிலும் நிலைமாற்றம் செய்யப்படும் பொழுது நடப்பு நிலவரங்கள் 
சிலாகித்து மேலெழுந்து நிற்கின்றன.
கதையின் எடுத்துரைப்பு வழியாக 
வாழ்க்கை மற்றும் சமகாலத்தைய சூழல் பற்றிய