புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இலங்கையின் வன்னி மாவட்டங்கள் : ஒரு கையேடு

ஒரு நூற்றாண்டு காலத்திற்கு நீடித்திருந்த நிர்வாகத்தினை பெருமளவில் வெளிக்கொணரும் வகையில் ஒரு குறிப்பிட்ட வருடத் தைச் சார்ந்ததல்லாது, பேரளவு நிர்வாக அறிக்கையாகும் இவ் ஒருங்கி ணைப்புகள் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுவது அவசியமாகிறது. 
அதிக அளவு விபரங்களைக் கொண்டு நீண்டதாகக் கூறுவது பிழையாயின், அவ்வாறு அமைந்தமை (முல்லைத்தீவு - வவுனியா ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள) இரண்டு கச்சேரிகளிலும் 1892ம் ஆண்டு வரை இருந்த நாட்குறிப்பேடுகளிலிருந்துழூ பெறப்பட்ட மேலோட்டமான ஒரு பகுதித் தகவல்கள் தான் என்பதைக் கருத்திற் கொள்ளத் தூண்டுகிறேன். கைந்நூலிலிருந்து மேற்கோள்கள் தவிர கருத்திற் கொள்ளக்கூடிய எந்த ஒரு பகுதியும் தவிர்த்து விடப்பட வில்லை என்பதனைப் பவ்வியமாகக் கூறுகின்றேன். உண்மையில், இவற்றை முதன்முறையாக வாசிக்கும்போது ஏற்படும் சிந்தனைகளால் இத்தகவல்கள் அனைத்தும் மிகவும் உறுதியானவையென உரிமை பாராட்ட முடியாது. ஏனெனில், காரியாலய நாட்குறிப்பேடுகள் பெருமளவில் அன்றாட சம்பவங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பன. 
ஆகையால், சில எல்லைகளை நாம் வகுக்க வேண்டிய நிலை ஏற்படக் காரணிகளாக அமைந்தவை, இக்கைந்நூலை ஆக்குவதற்குத் தேவையான உள்ளீடுகள் அந்தந்த இடங்களிலேயே திரட்டப்பட்டா லும், அவைகளை வடிவமைத்த போது, நான் சம்பந்தப்பட்ட இடங் களிலிருந்து வெளியேறியதும், சம்பவங்களுக்குரிய மாவட்டங்களி லிருந்து வெகு தூரத்திலிருந்தமையுமாகும்.
எவ்வாறான பூரணத்துவம் இல்லாதிருந்தாலும், நான் எவ்வித சிரமங்களையும் பாராது, இந்நூலைச் சரியான தகவல்கள் கொண்டதாக அமைத்துள்ளதோடு, எனக்குப்


முகிலன்
Mukilan

        உணர்வுகளின் வலிகளும் வசந்தங்களும் கவிதைகளாக மலரும். ஈழத்தமிழ் வரலாற்றில் உணர்வுகளில் வலிகளை சுமந்த இளைஞர்களே அதிகம். அவை சொந்த சுமைகளின் வரிகள் அல்ல சமூகத்தின் இருப்பில் முனைப்புற்று நின்ற வாழ்வின் வலிகள். அது நெடுந்தீவு முகிலனையும் விட்டுவைக்கவில்லை. 
வறுமை தீயில்
எரியும்
சின்னப் பூக்களின்
வரலாறு
வருங்கால
அகராதியில்
எழுதப்படாமல் 
போகப்போகிறது
       என்று சொல்வதிலும்
திரும்பவும் 
இந்த தேசம் என்றால்
வேண்டாம் எனக்கு
மறுபிறவி
       என்பதிலும் சமூகத்தின் காயத்தின் வலிகளை உணரும் ஒரு கவிஞன் தெரிகிறான். சொல்வதினூடாக சொல்லாதவற்றையும் உணர வைக்கும் கவிதை வரிகளுக்காக நெடுந்தீவு முகிலனுக்கு பாராட்டுக்கள். 
மரபார்ந்த சிந்தனைகளில் இருந்து விலகி மனிதம் தேடும் இந்தக் கவிஞன் பெண்ணின் படிமத்தை மட்டும் மரபார