புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வி ஆய்வியல்

அண்மைக்காலங்களில் கல்வித்துறையில் ஆய்வுச் செயற்பாடுகள் அதிகரித்துச் செல்வதனை நாம் காண முடிகின்றது. தனிநபர் தேவையின் பொருட்டும் பொதுநலன் கருதி பொது நிறுவனங்களினாலும் தனிநபர்களினாலும் பெருமளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலைமை காரணமாக ஆய்வில் ஈடுபடுவோர் ஆய்வியல் அறிவினைப் போதுமானளவிற்கு பெறவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 
இவ்வாறான நிலைமையில், ஆய்வில் ஈடுபடுமுன்னதாக ஆய்வு பற்றிய அறிவைத் திரட்டும் பண்டு ஆய்வாளரிடையே வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது. ஆய்வு பற்றிய அறிவை, குறிப்பாகக் கல்வித்துறையில், தேடிக் கொள்வதற்கான ஓர் உந்து சக்தியாக விளங்கவேண்டுமெனும் முதன்மை நோக்கோடு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன், கல்வி ஆய்வியியல் தொடர்பான நூல்கள் தமிழ்மொழியில் அரிதாக உள்ளமையும் இந்நூல் உருவாவதற்கான தேவையாக அமைந்துள்ளது. நூலின் அடக்கத்தினை மட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் காரணமாக, ஆய்வு தொடர்காபத் தெரிவு செய்யப்பட்ட சில முக்கிய விடயங்கள் மட்டுமே இந்நூலில் எடுத்தாளப்பட வேண்டி ஏற்பட்டமை தவிர்க்க முடியாதது. 
இந்நூலானது ஏழு இயல்களாக அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது இயல் ஆய்வியல் பற்றிய முன்னுரையாக அமைய, இரண்டாவது இயலில் ஆய்வின் பல்வேறு பரிமாணங்கள் சற்று விரிவாக நோக்கப்பட்டுள்ளன. ஆய்வுச் செயற்பாட்டில் இலக்கிய மீளாய்வு கொண்டுள்ள முக்கியத்துவம் காரணமாக, அது பற்றிய முக்கியமான கருத்துக்கள் மூன்றாவது இயலாக அமைகின்றது. நான்காவது இயலில் ஐந்து வகையான ஆய்வு முறைகள் விபரிக்கப்பட்டுள்ளன. ஐந்தாவது இயலில் பல்வேறு வகையான மாதிரியெடுப்பு உபாயங்கள் விபரி


க.சௌந்தரராஜன்
K.Sounthararajan

திரு. சௌந்தரராஜன் அவர்கள் நூலக விளிப்புணர்வு நிறுவனத்தின் ஆலோகசராக இருந்து வருகின்றார். சேமமடு பதிப்பகமும் நூலக விளிப்புணர்வு நிறுவனமும் இணைந்த வெளியிட்ட 'கருத்தூண்' சிறப்பு மலர் 2005 – 2015 மலர் ஆசிரியராக கடமையாற்றியவர்.