புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தமிழியலும் திறனாய்வுக் கலையும்

தமிழ்ச் சூழலுக்குரிய தனித்துவமான திறனாய்வுக் கோட்பாட்டை உருவாக்கும் அறிகை முயற்சி இந்நூலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
ஐரோப்பியச் சூழலில் பல்வேறு திறனாய்வுக் கோட்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. பன்மைச் சூழலும் அறிவின் புத்தாக்க வடிவங்களும் கலை இலக்கியங்களை அணுகும் முறைகளும் புதிய திறனாய்வு வடிவங்களை உருவாக்கி வருகின்றன.
தமிழ் மரபுக்குரிய திறனாய்வு அணுகுமுறையின் தோற்றத்தினைத் தொல்காப்பியத்திலே காண முடியும். தமிழில் உருவாக்கம் பெற்ற இலக்கண நூல்களிலும், உரை மரபுகளிலும் திறனாய்வுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. 
மேலைப்புலத்திறனாய்வுக் கோட்பாடுகள் கருத்தியலை (ஐனநழடழபல) உட்பொதிந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. கருத்தியலும் திறனாய்வும் வேறு பிரிக்க முடியாதவை என்பதை மீள வலியுறுத்த வேண்டியுள்ளது. 
இந்நூலாக்க முயற்சிக்கு உற்சாகம் தரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரும், மாலைக் குழுவினரும், பல்கலைக்கழகத்தினரும் வெளியீட்டாளரும் நன்றிக்குரியவர்கள். 

சபா.ஜெயராசா


ச.முத்துலிங்கம்
Muthulingam, S

பேராசிரியர் முனைவர் ச.முத்துலிங்கம் கல்வியியல் துறைசார் முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர். இவர் தமிழில் கல்வியியல் துறையின் விரிவுக்கும் ஆராய்ச்சிக்கும் புதுத்தடம் அமைத்துக் கொடுத்தவர். இன்று கல்வியியல் பன்துறை அறிகை மரபுகளின் குவிமுனையாக தமிழில் மேலெழுச்சி பெற்று வருவதற்கு தெளிவான சிந்தனைப் புலத்தையும் ஆய்வுக் களத்தையும் உருவாக்கி வளர்த்தெடுப்பதில் பெரும் பங்கு கொண்டவர். கலவி உளவியல் எனும் பொருட்பரப்பில் ஆசிரிய மாணவர்களை முழுமையாக ஈடுபாடு கொள்ளவும் இச்சிந்தனைத் தொடர்ச்சியின் முளுமையை உள்வாங்கவும் சாதகமான சூழலை உருவாக்க முன்னின்று உழைத்தவர். இத்துறைசார் அடிப்படை எண்ணக்கருக்களை அறிக்கை மரபுகளை தமிழில் தெளிவாக எடுத்துரைக்கும் முறைமைக்குத் தடம் அமைத்தவர்.