புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியியற் சிந்தனைகள்

கல்வியியல் நிலையிலே நீண்டு நெடிது தேடல்களை முன்னெடுத்த புலமையாளராக விளங்கியவர் பேராசிரியர் ப.சந்திரசேகரம். 
தேடலே அறிவு நோக்கிய நகர்ச்சியை ஏற்படுத்துகின்றது. உலக நிலவரங்களையும் சமூகத்தையும் புலக்காட்சி கொள்ளலுக்கும் அறிவின் இருப்புக்குமுள்ள உசாவல் அவரது கல்வியியல் எழுத்தாக்கங்களில் ஊடுருவி மேலெழுகின்றன.
அறிவின் அமைப்புக்கும் அதன் உள்ளடக்கத்துக்கும் அது கையளிக்கப்படும் முறைமைக்குமிடையேயுள்ள தொடர்புகள் கல்வியில் நோக்கிலே முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றை அடியொற்றியே வரன்முறையான தருக்க முறைமைகள் உருவாக்கம் பெற்றன. அவற்றின் முரண்பாடுகளும், முகிழ்த்தெழும் ஒன்றிணைந்த தொகுப்பும் பேராசிரியர் கட்டுரைகளின் நிறைபொருளாகவுள்ளன.
பகுத்தலும், சிந்திய வடிவில் நிற்கும் அறிவுத் துணிக்கைகளில் மீது ஊன்றிய கவனத்தைச் செலுத்துதலும், ஓரங்கட்டப்பட்டு எல்லை நிலையில் உள்ளவற்றின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்துதலும், வேண்டிய விடயங்களிலே திரட்டல் வடிவாக்குதலும் கட்டுரைகளில் இடம்பெறும் தனித்துவமான பதிவுகளாகவுள்ளன. 
அறிவுக்கும் சமயங்களுக்கும் அறிவுக்கும் நிறுவனங்களுக்கும், ஆளுமைகளுக்குமுள்ள தொடர்புகள் நுணுகி நோக்கப்படுவதுடன் அவற்றிலிருந்து முகிழ்த்தெழும் கருத்தியல்களின் உறுதிப்பாடுகளும் செறிவுடன் நோக்கப்பட்டுள்ளன. சார்புநிலை நோக்கும் இயக்கவியல் தரிசனமும் அவரது எழுத்தாக்கங்களில் விரவி நிற்கின்றன.
'அறிதல்' (முழெறiபெ) என்பது கருத்தாடல்களின் ஆழங்களை நோக்கிய உளச் செயல்முறையாகின்றது. கல்விச் செயல்முறையில் அது சிறப்பார்ந்த இடத்தை


ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
Muthuthtampippillai, A

யாழ்பாணத்திலேயுள்ளவர்க்கு, யாழ்பாணத்தினது பூர்வோத்தர  சரித்திரத்தை அறிவது அவசியமும் ஆனந்தமுமாம் யாழ்பாணத்தை பூகோள படத்திலே நோக்கும்போது அதுகடுகுபிரமாணமாய்த் தோன்றினும் அதன் சரித்திரத்தை நோக்கும் போது பெரிய தேசங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமையுடையதாகின்றது. யாழ்பாணம் சிறியதாயினும் அதிலிருந்தரசியற்றியசிலவரசர், தமது பாராக்கிரமத்தினாலே இலங்கை முழுதையுங் கட்டியாண்டதோடு, பாண்டிநாடு சேரசோழ நாடுகளையும் ஒவ்வோரமையங்களில் வெற்றிக்கொண்டிருக்கின்றார்;கள். என்றால் அதன் சரித்திர பெருமை கூறவும் வேண்டுமோ. 1505ல் இலங்கைக்கு  வந்த பறங்கிக்காரர்; இலங்கையில் அநேக நாடுகளை சிங்களவரசர்;பாற் கவர்;ந்தப்பின்னரும் நூறுவருஷஞ் சென்றே யாழ்பாணத்தை பிடித்தார்;கள். அவர்;கள் மூன்றுமுறை போர்தொடுத்தும் நிருவகிக்க முடியாது தோற்றோடினார்;கள் என்பர்;. சமாத