புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பின்னவீனத்துவ உரையாடல்

பின்னவீனத்துவத்தைப் பல பரிமாணங்களினூடாக நோக்கல் இந்நூலாக்கத்திலே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு தேவையை நண்பர்கள் நீர்வை பொன்னையன், தெ.மதுசூதனன், த.சிவசுப்பிரமணியம் ஆகியோர் வற்புறுத்தியதுடன், பல மூலநூல்களையும் வாசிப்பதற்குத் தந்து உற்சாகமளித்தனர். 
பின்னவீனத்துவத்தை அறிவு நேர்மையுடன் நோக்க வேண்டியுள்ளது. சுய விருப்பின் காரணமாக அதனை மிகைப்படுத்திக் கூறுதலோ அல்லது தாழ்த்தி மதிப்பீடு செய்தலோ பொருத்தமற்றது. 
பல புதிய சொற்களஞ்சியங்களைப் பின்னவீனத்துவம் உலகின் அறிவுத் தேட்டத்துக்குத் தந்துள்ளது. அவை தமிழ் மொழிக்கும் வளம் தந்துள்ளன. சமகாலக் கருத்து வினைப்பாடுகளை மேலெழச் செய்வதில் பின்னவீனத்துவத்தின் பங்கு நிதானத்துடன் நோக்குதற்குரியது. 
1960ஆம் ஆண்டைத் தொடர்ந்து ஐரோப்பாவின் அறிகை விசையாக மேலெழத் தொடங்கிய பின்னவீனத்துவச் சிந்தனைகள் கடந்த நூற்றாண்டின் பிற்கூற்றிலிருந்து தமிழில் வேகமாகப் பரவத் தொடங்கின. ஒவ்வொருவரும் தத்தமது அகவயப் பாங்கோடு பின்னவீனத்துவத்தை அணுகுதல் தமிழிற் பழக்கமான பாடமாகியும் விட்டது. இந்நூலை வெளியிடும் சேமமடு வெளியீட்டாளர் நன்றிக்குரியவர். 
சபா.ஜெயராசா
தலைவர்
கொழும்புத் தமிழ்ச் சங்கம்

 

 


சபா.ஜெயராசா
Jeyarasa, Saba Prof

பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா தமிழில் "கல்வியியல்" துறைசார்ந்த நூல்கள் பல எழுதி, அத்துறைசார் விருத்தியில் முதன்மையான பங்கு வகித்து வருபவர். கலை, இலக்கியம், உளவியல், தத்துவம் எனப் பல்வேறு துறைசார் புலங்களுடன் ஊடாடி வருபவர். இவற்றின் செழுமை மற்றும் அறிவு, ஆய்வு யாவும் இவரது "புலமைமரபு" எத்தகையது என்பதைத் தனித்துத் துல்லியமாக வெளிப்படுத்தும். மேலும் கலை, தத்துவம் பற்றிய தொடர் விசாரணை, இவரைப் புதிய அறிவுருவாக்கப் பணியில் முழுமையாக ஈடுபட வைப்பதுடன், கல்வியின் பொருள்கோடல் சார்ந்து புதிய புதிய அர்த்தப்பாடுகளை நோக்கிக் கவனம் குவிக்கவும் செய்கிறது. தொடர்ந்து புதிய ஆய்வுக் களங்கள் நோக்கியும் கவனம் கொள்ளத் தூண்டுகிறது.

இன்றுவரை கல்வி உலகில் முனைவர் சபா.ஜெயராசா உயிர்ப்பு