புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கலைத்திட்டம்

கல்வியின் செயற்களமாக விளங்கும் கலைத்திட்டம் பற்றிய அறிவையும் விளக்கங்களையும் மேம்படுத்துவதன் வாயிலாக உன்னதங்களை நோக்கி விரைந்து செல்ல முடியும். மேலும் கல்விச் செயல்முறையால் வெளிவீசப்படுபவர்கள் பற்றியும், எல்லைப்படுத் தப்பட்டவர்கள் பற்றியும் சிந்தித்துப் பொருத்தமான நடவடிக்கை களை முன்னெடுப்பதற்கு கலைத்திட்டம் பற்றிய அறிவு இன்றிய மையாது வேண்டப்படுகின்றது. 
மாணவர்களது பன்முகப்பாடுகளுக்கும், தனித்துவங்களுக்கும் முன்னுரிமை வழங்குதலும், கல்வியிலே சமத்துவம், சமசந்தர்ப்பம், சமநீதி முதலியவை பற்றிய சிந்தனைகளைத் தொகுத்தலும் மேலெழுந்து உயரும். தற்போது சமகால நிலவரங்கள் கலைத்திட் டம் என்ற கருவியை உன்னிப்பாகவும் திறனாய்வுடனும் அணுகத் தொடங்கியுள்ளன. 
கல்வி தொடர்பான பொறுப்பியம் (யுஉஉழரவெயடிடைவைல) கூறுபவர் யார்  என்ற நிலையின் இறுதியில் ஆசிரியர் மீது சுமத்தப்படும் அழுத்தங்கள் நியாயமானதா என்பதைத் தெளிவாகப் புலக்காட்சி கொள்வதற்கும் கலைத்திட்டம் பற்றிய கற்கையினை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 
கல்விச் செயற்பாடுகளைப் பன்மை நிலைப்படுத்தலின் அனுகூலங்கள் பற்றி விதந்துரைக்கப்படும் சூழலில் பன்மை நிலைக்குத் தளமாகவும் வளமாகவும் அமையக்கூடியவாறு கலைத்திட்டத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் தெளிவான கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட வேண்டி யுள்ளமை ஆய்வுகளின் மேலெழுகையாகவுள்ளன.

சபா.ஜெயராசா 


பி.இராமநாதன்
Ramanathan, P

அறிஞர் பி.இராமநாதன் மொழியியல் வரலாறு , அகழ்வாய்வு முதலிய துறைகளில் ஆழங்காற்பட்டவர். தமிழியம் தழைத்தற்கு அடிப்படையான எழுத்துப்பணியில் ஈடுபட்டிருப்பவர். இவர் தமிழ் முந்து செம்மொழி என்பதை நிலைநாட்டும்வகையில் அதன் தொன்மையையும் பண்டைத் தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்புக்களையும் ஏரண நெறிப்படி எடுத்து விளக்கி தொன்மைச் செம்மொழி தமிழ் என்னும் நூலையும் எழுதியுள்ளார். இந்நூல் செம்மொழி பற்றியும் தமிழின் எதிர்காலம் பற்றியும் பல்வேறு புலனங்களையும் தாங்கியுள்ளது.