புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வி மீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும்

கல்வி என்பது மாற்றம் என்பதாகவும் பொருள்படும். அந்த மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர் களுக்கு இன்று பல்வேறு வேலைப்பளுக்கள் காணப்படுகின்றன. அதில் மாணவர்களை மாற்றத்திற்குள்ளாக்க வேண்டிய கட்டாய கடப்பாடும் உண்டு. தேர்ச்சிமையக் கலைத்திட்டத்தின் ஊடாக மாணவர்கள் விரும்புகின்ற இடமாக வகுப்பறைகள், பாடசாலைகள் மாற்றம் காணுமாக இருந்தால் மாத்திரமே வேலைகளை இலகுவாக்கி கற்றல் கற்பித்தலில் மாற்றத்தைக் கொண்டுவந்து நாளைய உலகிற்கான நற்பிரஜைகளைத் தோற்றுவிக்கின்ற, புத்தாக்கமுடைய, சிந்தனைச் சிற்பிகளை உருவாக்க முடியும். இதனைத்தான் இன்றைய கல்விப் புலமும் எதிர்பார்க்கின்றது. 
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி சில பாடசாலைகள் வெற்றி பெற்றுள்ளன. பல பாடசாலைகளில் இதனை மேற்கொள்வதில் மிகவும் கடினத்தை எதிர்நோக்குகின்றன. இதற்கான காரணங்கள் என்ன? அடிப்படையான பிரச்சினைகள் என்ன? யார் யார் பொறுப்புதாரிகள் என்கிற தேடலை மாணவர்கள் சார்பாகவும், ஆசிரியர்கள் சார்பாகவும், கல்வித்துறைசார்பாகவும் ஆய்ந்தேன். இது கல்விச் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற நோக்கில் எனக்குள்ள கடமையாக நினைத்து தத்துவார்த்த விடயங்களைத் தாண்டி யதார்த்தத்தின் ஊடாக நடைமுறைப் பிரச்சினைகளையும், உண்மைத் தன்மைகளுடன், எனது பார்வையில் இனங்கண்ட விடயங்களையும் 'கல்வி மீதான நம்பிக்கை களும் புதிய இலக்குகளும்' எனும் தலைப்பில் 16 கட்டுரைகள் ஊடாக கூறவிளைந்துள்ளேன். இக்கட்டுரைகள் கல்வியியல் தொடர்பாக பாடசாலைகள், வகுப்பறைகள், கற்றல் நிலைமைகள் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள் கின்றவர்க


சி.சிவேசன்
Sivesan, S

சிவானந்தமூர்த்தி சிவேசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் துறையில் விரிவுரையாளராக உள்ளார். இவர் களனிப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் பின்படிப்பையும் தொடர்கின்றார். வணிகவியல், சந்தைப்படுத்தல், பொருளியல், முகாமைத்துவம் முதலான துறைகளினூடு ஊடாடி தனது அறிவை விரிவாக்குவதில் ஆர்வமுடன் உழைத்து வருகின்றார். 

 
இவர் பல்வேறு ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். சந்தைப்படுத்தலின் ஆழமான அறிவைப் பெறவேண்டுமென்று துடிக்கும் ஒரு இளம் விரிவுரையாளர். வங்கி, காப்புறுதி, தொடர்பாடல் போன்ற சேவைத்துறைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பல கருத்தரங்குகளை நடத்தி அவர்களின் சேவைச் சந்தைப்படுத்தலின் விருத்திக்கு உதவி வருபவர்.