புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பெளதீகப் புவியியல்: செயன்முறையும் நிலவுருவங்களும்


புவிவெளியுருவவியல் என்பது புவி பற்றிய ஒரு விஞ்ஞானமாகும். புவியில் காணப்படும் அம்சங்களின் தோற்றம், வரலாறு, அத்துடன் அது எவ்வாறு மாற்றமடைகின்றது என்பது பற்றிய இயக்கத் தன்மையுடன் தொடர்புடையது. பல்வகைத் தோற்றப்பாடுகளான எரிமலைகள், பனிக்கட்டியாறுகள், அருவிகள், கடற்கரையோரங்கள், புவிநடுக்கங்கள் என்பவை பற்றி புவிச்சரிதவியலாளர்களும் புவியியலாளர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற மாற்றங்கள், சமகால மாற்றங்கள், எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றிய இயற்கையின் விளங்கிக்கொள்ளலாக இக்கற்கைநெறி அமைந்துள்ளது. 
    புவியின் மேற்பரப்பில் காணப்படும் பல்வேறு அம்சங்கள், அவை உருவாகியபோது நிகழ்ந்த செயன்முறைகளை இன்றும் வெளிக்காட்டி நிற்கின்றன. சகாரா பாலைவனத்தின் மணற்குன்றுகள், அலைகளின் செயற்பாட்டினால் ஏற்பட்ட அத்திலாந்திக் கரை யோரத்தின் அமைப்புக்கள், எரிமலை வெடிப்புக்களை வெளிப்படுத் திக் காட்டும் ஹாவாய்தீவுகள் என்பன புவியின் வரலாற்றினையும் அதன் இயங்கு தன்மையினையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிலவாக அமைந்துள்ளன.
    உயர்தர வகுப்பில் புவியியலை ஒரு பாடமாகக் கற்கும் மாண வர்களைப் பொறுத்தவரையில் தகுதி வாய்ந்த நூல்களின் பற்றாக் குறை முக்கியமானதொரு குறைபாடாகக் கூறப்பட்டு வந்துள்ளது. இலங்கையின் பாடசாலை முறைமையைப் பொறுத்தவரை வகுப் பறைப் பாடம் மற்றும் தனியார் போதனை நிலையங்களில் வழங்கப் படும் போதனை தவிர்ந்த ஏனைய சுயகற்றல் முறைகளினுடாகப் புவியியலைக் கற்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன.


முகிலன்
Mukilan

        உணர்வுகளின் வலிகளும் வசந்தங்களும் கவிதைகளாக மலரும். ஈழத்தமிழ் வரலாற்றில் உணர்வுகளில் வலிகளை சுமந்த இளைஞர்களே அதிகம். அவை சொந்த சுமைகளின் வரிகள் அல்ல சமூகத்தின் இருப்பில் முனைப்புற்று நின்ற வாழ்வின் வலிகள். அது நெடுந்தீவு முகிலனையும் விட்டுவைக்கவில்லை. 
வறுமை தீயில்
எரியும்
சின்னப் பூக்களின்
வரலாறு
வருங்கால
அகராதியில்
எழுதப்படாமல் 
போகப்போகிறது
       என்று சொல்வதிலும்
திரும்பவும் 
இந்த தேசம் என்றால்
வேண்டாம் எனக்கு
மறுபிறவி
       என்பதிலும் சமூகத்தின் காயத்தின் வலிகளை உணரும் ஒரு கவிஞன் தெரிகிறான். சொல்வதினூடாக சொல்லாதவற்றையும் உணர வைக்கும் கவிதை வரிகளுக்காக நெடுந்தீவு முகிலனுக்கு பாராட்டுக்கள். 
மரபார்ந்த சிந்தனைகளில் இருந்து விலகி மனிதம் தேடும் இந்தக் கவிஞன் பெண்ணின் படிமத்தை மட்டும் மரபார