புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பேராசிரியர் நந்தியும் மலையகமும்

பேராசிரியர் நந்தி வாழ்ந்த காலத்திலேயே அவர் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய சேவையை ஆராய்ந்து ஒரு நூல் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் முகிழ்ந்திருந்தது. 
ஒருநாள் வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் ஓர் இலக்கியக் கூட்டம் முடிந்து திரும்பும் வேளையில் நந்தி அவர்களுடன் கொட்டாஞ்சேனை வரைக்கும் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் அரியவாய்ப்புக் கிடைத்து மனம் மகிழ்ந்தோம்.  நாம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு 'நாவல் நகரில் நந்தி சந்திப்புகள்' நூலாக்கம் பற்றிக் குறிப்பிட்டு அபிப்பிராயம் கேட்டோம். 
அவர் சற்று நேரம் மௌனித்துவிட்டுச் 'சரி' உங்கள் விருப்பம்... சந்திப்புகள் நல்ல தலைப்பு என்று கூறினார். நாம் மிகுந்த ஆர்வத்தோடு அவரது வார்த்தைகளை உள்ளூர ஒரு அங்கீகாரமாகவே ஏற்று நூல் வெளியிடத் திட்டமிடத் தொடங்கினோம்! 
நந்தி மறைந்த பிறகு எமது எண்ணம் வலுவடைந்தது. மலையகத்தில் நந்தியுடன் மிக நெருக்கமாகப் பழகிய நண்பர்களுக்குக் கடிதம் எழுதினோம்.  நண்பர் சாரல்நாடன் பாராட்டுக் கடிதத்துடன் கட்டுரை அனுப்பி எம்மை உற்சாகப்படுத்தினார்.  அதைத் தொடர்ந்து கட்டுரைகள் அஞ்சலிலும் நேரடியாகவும் வந்து சேரத்தொடங்கின. 
மலையகம் ஒரு பின்தங்கிய பிரதேசம் இது பல தசாப்தங்களாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு கருத்து.  ஆனால், இதனை மிகத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால், மலையகம் காலம் காலமாக, பல்வேறு துறைகளின் ஊடாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்து வந்துள்ளதை மிகத்தெளிவாக அவதானிக்க முடியும்.
குறிப்பாகக் கல்வி, கலை, இலக்கிய, மருத்துவ மற்றும் பொதுத் துறைகளில் மலையக


க.சி.குலரத்தினம்
Kularatnam, C.S

ஈழத்துத் தமிழ்ப் புலமை மரபில் பல்துறை ஈடுபாட்டாளராக விளங்கியவர் க.சி.குலரத்தினம் ( 1916 - 1993 ). இவர் மரபு நவீனம் வழிவந்த மருகளை உள்வாங்கியவர். சைவாசிரியர் கலாசாலை மரபிலும் திளைத்தவர். தொடர்ந்து கால்நூற்றாண்டுக்கு மேலாக ஆசிரியப்பணி புரிந்தவர். கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் மட்டுமல்ல தொடர் ஆய்வு முயற்சிகளிலும் தீவரமாகச் ஈடுபட்டவர். செந்தமிழ் வளர்த்த செம்மல்கள், சைவம் வளர்த்த சான்றோர்கள், தமிழ் தந்த தாத்தாக்கள் போன்ற மூலம் ஈழத்துத் தமிழ் மரபின் தளமும் வளமும் பற்றிய தேடுகைக்கான ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் மீளுருவாக்கம் செய்தவர். நோத் முதல் கோபல்லா வரை என்னும் தூல் மூலம் வரலாற்று அரசியல் இணைப்புக்களை ஆய்வு ரீதியில் விளக்க முற்பட்டவர். அதன்மூலம் தமிழுணர்வு முகிழ்ப்பின் தோற்றப்பாடுகளையும் அடையாளம் காட்டியவர். இந்து நாகரீகம் தந்து இந்து ம