Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கல்வி மீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2015-06-01-135
ISBN : 978-955-685-034-5
EPABNo : EPAB/02/18832
Author Name (எழுதியவர் பெயர்) : எஸ்.எல்.மன்சூர்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2015
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 114
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 360.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

1.    பாடசாலைக் கல்வியில் மாணவர், ஆசிரியர் வகிபங்கு    01
2.    பாடசாலைகளில் முகாமைத்துவ சீரின்மை    08
3.    மாணவர் இடைவிலகல் பிரச்சினைகள்    15
4.    பாடசாலைக்கல்வி மீதான நம்பிக்கை    21
5.    சமூகம் எதிர்பார்க்கின்ற மாணவர்கள்    28
6.    கற்றலில் மொழியின் பங்களிப்;பு       35
7.    எமது கல்வி வளமும், மாணவச் செல்வங்களும்    40
8.    வீடுகளும் கற்றலுக்கான தளங்களே    47
9.    பாடசாலைக் கல்வியில் பண்புசார் விருத்திக்கான காரணிகள்    53
10.    செயல்வழி ஆய்வில் ஆசிரியர்கள்    63
11.    வறுமையும் கல்வியும்    68
12.    ஆரம்பக்கல்வியில் சுற்றாடல்சார் செயற்பாடுகள்    75
13.    அறிஞர்களது பார்வையில் கல்வியின் முக்கியத்துவம்    90
14.    கல்விமீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும்    95
15.    மனித மேம்பாட்டுக்குதவும் கல்வி    104
16.    மாணவர்களும் பரிகாரக் கற்பித்தலும்;;    109

 

Full Description (முழுவிபரம்):

கல்வி என்பது மாற்றம் என்பதாகவும் பொருள்படும். அந்த மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர் களுக்கு இன்று பல்வேறு வேலைப்பளுக்கள் காணப்படுகின்றன. அதில் மாணவர்களை மாற்றத்திற்குள்ளாக்க வேண்டிய கட்டாய கடப்பாடும் உண்டு. தேர்ச்சிமையக் கலைத்திட்டத்தின் ஊடாக மாணவர்கள் விரும்புகின்ற இடமாக வகுப்பறைகள், பாடசாலைகள் மாற்றம் காணுமாக இருந்தால் மாத்திரமே வேலைகளை இலகுவாக்கி கற்றல் கற்பித்தலில் மாற்றத்தைக் கொண்டுவந்து நாளைய உலகிற்கான நற்பிரஜைகளைத் தோற்றுவிக்கின்ற, புத்தாக்கமுடைய, சிந்தனைச் சிற்பிகளை உருவாக்க முடியும். இதனைத்தான் இன்றைய கல்விப் புலமும் எதிர்பார்க்கின்றது. 
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி சில பாடசாலைகள் வெற்றி பெற்றுள்ளன. பல பாடசாலைகளில் இதனை மேற்கொள்வதில் மிகவும் கடினத்தை எதிர்நோக்குகின்றன. இதற்கான காரணங்கள் என்ன? அடிப்படையான பிரச்சினைகள் என்ன? யார் யார் பொறுப்புதாரிகள் என்கிற தேடலை மாணவர்கள் சார்பாகவும், ஆசிரியர்கள் சார்பாகவும், கல்வித்துறைசார்பாகவும் ஆய்ந்தேன். இது கல்விச் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற நோக்கில் எனக்குள்ள கடமையாக நினைத்து தத்துவார்த்த விடயங்களைத் தாண்டி யதார்த்தத்தின் ஊடாக நடைமுறைப் பிரச்சினைகளையும், உண்மைத் தன்மைகளுடன், எனது பார்வையில் இனங்கண்ட விடயங்களையும் 'கல்வி மீதான நம்பிக்கை களும் புதிய இலக்குகளும்' எனும் தலைப்பில் 16 கட்டுரைகள் ஊடாக கூறவிளைந்துள்ளேன். இக்கட்டுரைகள் கல்வியியல் தொடர்பாக பாடசாலைகள், வகுப்பறைகள், கற்றல் நிலைமைகள் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள் கின்றவர்களுக்கும் துணைநிற்கும் என்பது  என்நம்பிக்கை.
இதுவரைக்கும் சுமார் 2000க்கும் மேற்பட்ட கல்விசார்பான கட்டுரைகளையும், அரசியல், ஆய்வியல், சிறுகதை, கவிதை, சமூகம், நூலாய்வு என்று நூற்றுக்கணக்கான பதிவுகளையும் என் பேனா துணைகொண்டு தேசிய பத்திரிகைகளிலும், கல்விசார் இதழ்களிலும் எழுதி வந்திருக்கின்றேன். ஆசிரியம் கல்விசார் சஞ்சிகையிலும் தொடராக கல்விக் கட்டுரைகளை எழுதிவருகின்றேன்.
என் எழுத்துக்களுக்கு கௌரவம் கொடுத்து நூலாக வெளியிடுகின்ற சேமமடு பதிப்பகத்தாருக்கும், எனது எழுத்துக்களுக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்து வருகின்ற தெ.மதுசூதனன் ஐயா அவர்களுக்கும் என் உளமகிழ்ந்த நன்றியினைச் சொறிகின்றேன். அத்துடன் என் எழுத்துக்களுக்கு எப்போதுமே வாசம் கொடுத்து வருகின்ற அட்டாளைச்சேனை கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர், உறுப்பினர்களுக்கும், எனது அன்புக்குரிய வாசகர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். எனது கல்விக் கட்டுரைகளின் முதலாவது தொகுப்பு இந்நூலாகும். ஏற்கனவே பல புத்தகங்களை நான் வெளியிட்டிருந்தாலும், நான் விரும்புகின்ற, எனது துறையோடு சார்ந்த கல்விக் கட்டுரைகள் அடங்கிய இந்நூல் கல்விப்புலத்தினர் அனை வருக்கும் பயன்படும் என்கிற நம்பிக்கையில் விடைபெறுகின்றேன்.
நன்றி
எஸ்.எல்.மன்சூர்
ஆசிரிய ஆலோசகர்,
அட்டாளைச்சேனை.